பைஷல் எம் இஸ்மாயில்,அ.றஹ்மான்;
கடந்த
கல்விப்பொதுத் தராதர சாதரன தரப் பரீட்சையில்அட்டாளைச்சேனை தேசிய
படசாலையில் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளைப்பெற்று அட்டாளைச்சேனை
மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவனை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று
பாடசாலை அதிபர் வி.ரி.எம்.ஹனீபா மெளலவி தலைமையில் இன்றைய விஷேட ஆராதனை
நிகழ்வில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினரும் அம்பாரை
மாவட்டப் பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் ஏற்பாடு
செய்திருந்தார். ஊருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவனைப் பாராட்டி
கெளரவிக்க வேண்டும் என்பதற்காக மேற்படி நிகழ்வை ஏற்பாடு செய்து
மாணவனைப்பாராட்டி பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.அம்பாரை மாவட்டத்தில் முன்னனிப் பாடசாலையாகத் திகழும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் சிறந்த பெறுபேற்றினை பெறும் மாணவர்களைக் கெளரவித்து வரும் எஸ்.எல்.முனாசுக்கு பாடசாலை சமூகம் நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.
எதிர்வரும் காலங்களில் அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேருகளைப் பெறும் மாணவர்களுக்கு 50,000 ரூபா பணப்பரிசினை வழங்குவதாகவும் மாணவர்கள் முன்னிலையில் பேசும் போது குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்களான ஏ.எல்.அன்வர், எம்.சீ.சரீனா உம்மா, ஏ.கே.எம்.நியாஸ். உதவி அதிபர்களான ஏ.எல்.அப்துல் பத்தாஹ், எம்.ஏ.அபு தாஹீர் வலையத் தலைவர்களான ஏ.றியாஸ் முஹம்மட், எம்.ரி.எம்.சியாத், எம்.எப்.முஹம்மட் நழீம், எஸ்.எல்.அப்துல் ரஸாக், எம்.எல்.மஹ்பூர், மற்றும் வலையத்தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மாணவனின் பெற்றோர்கள் இஸ்திகீன் ஆசிரியரும் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment