எம்.வை.அமீர்;
எதிர்வரும் 2014-04-20 ம் திகதி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள
பல்வேறுபட்ட அங்குராப்பன நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த
ராஜபக்க்ஷ அவர்கள் வருகை தரவுள்ளார்கள் இந்நிகழ்வை சிறப்பாக நடாத்த வேண்டும் என்ற நிலையில்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களது
தலைமையில் நிகழ்வு தொடர்பான மீளாய்வுக்கூட்டம் இன்று 2014-04-11 ம் திகதி பல்கலைக்கழகத்தின் அரபிக் பீட கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய உபவேந்தர் கலாநிதி
எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வருகையை
நாங்கள் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்றும் அதற்க்கு சகலரும் ஒத்துழைக்க
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும்
2014-04-20 ம் திகதி காலை 10.30
மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களினால்
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தையும் வர்த்தக முகாமைத்துவ
பீடத்துக்கான கட்டிடத்தொகுதியையும் திறந்துவைக்கவுள்ள அதேவேளை ஒலுவில்
வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் மாணவர்
விடுதிக்கான அடிக்கல்களும் நடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 2000
பேர் பங்குகொள்ளக்கூடிய கூட்டம் ஒன்றும் இங்கு இடம்பெறவுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி
மகிந்த ராஜபக்க்ஷ அவர்களுடன் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களும் நீதி
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்
போன்றோருடன் அரசியல் பிரமுகர்களும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளும் உள்ளூர் பிரமுகர்களும்
கலந்து கொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment