• Latest News

    April 11, 2014

    'யார்க்கர்' பந்து வீச்சின் ரகசியம் என்ன? மனம் திறக்கிறார் மலிங்கா

    உலகக்கிண்ணத்தை வெல்ல உறுதுணையாக இருந்த எனது திறமையான 'யார்க்கர்' பந்து வீச்சு ஐ.பி.எல் மூலம் பெறப்பட்டது என்று மலிங்கா கூறியுள்ளார்.

    இலங்கைக்கெதிரான ஐசிசி டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இறுதி ஓவர்களில் பெரிய ஓட்டங்கள் எடுக்க இயலாமல் இருந்தது தான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
    இறுதி 4 ஓவர்களில் 19 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்த மகேந்திர சிங்கை தலைவராக கொண்ட இந்திய அணி 130 ஓட்டங்களில் சுருண்டது.

    இலங்கை அணியின் அணித்தலைவரும் பந்து வீச்சாளருமான மலிங்கா இந்திய அணியின் ஓட்டங்களை சரலமாக கட்டுப்படுத்தினார். இவர் 4 ஓவர்களில் 27 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    மேலும் மலிங்கா தனது பந்து வீச்சை பற்றி கூறியதாவது, எனது சிறப்பான பந்து வீச்சு ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் வந்துள்ளது. நான் இப்போதும் ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறேன்.

    பிரிமியர் தொடரில் விளையாடுவதின் மூலம் இந்திய வீரர்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை கற்றுக் கொண்டேன். சிலர் வெற்றிக்கு காரணம் அதிஷ்டம் என்பார்கள், ஆனால் எங்களுக்கு கிடைத்த இந்த வெற்றி கடின உழைப்பால் பெறப்பட்டது என்று கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'யார்க்கர்' பந்து வீச்சின் ரகசியம் என்ன? மனம் திறக்கிறார் மலிங்கா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top