கடந்தவாரம் வெளியான கல்விப் பொதுத்தராத சாதாரணதரப் பரீட்சையில் காலி,
சென்.ஆலோசியஸ் பாடசாலையைச் சேர்ந்த பார்வையற்ற மாணவன் ஒருவர் 8ஏ, 1 பி
சித்தியை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தெலிக்கட, கினிமெல்லக பிரதேசத்தைச்சேர்ந்த இசுறு மஹேஸ் பண்டித என்ற மாணவரே இவ்வாறு சிறந்த பரீட்சை பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் பிரெஞ்சு மொழி, ஆங்கில
இலக்கியம் மற்றும் வரலாறு ஆகியவற்றை பிரதான பாடங்களாக தெரிவு செய்து
எதிர்காலத்தில் சட்டத்தரணியாக வரவேண்டும் என்பதே தன்னுடைய எதிர்கால இலக்கு
என அம்மாணவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment