அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கடற்கரையிலுள்ள பழைய ஜஸ்வாடிக்கு அருகில்
ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சடலத்தை செவ்வாய்க்கிழமை (08) காலை கண்ட பொதுமக்கள் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.
சம்மாந்துறை, இ – 137 பௌசிமாவத்தையைச் சேர்ந்த எம்.நஸீம்( வயது 30 )
என்பவரே சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
இவர் கல்முனை கடற்கரைப்பள்ளிக்கு தனியாக வந்ததாகவும் இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment