அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி
நாடாளுமன்றில் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்றும், நாளையும்;
விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில்,
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய
சுதந்திர முன்னணி தமது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளது. அது தவிர
ஜாதிக்க ஹெல உறுமய தமது தீர்மானத்தை நாளை அறிவிக்க உள்ளது.
அரசாங்கத்தின் அசமந்த போக்கு தொடர்பில்
விசனம் கொண்ட 26 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நம்பிக்கையில்லா
பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின்
பங்காளி கட்சியான ஜாதிக்க ஹெல உறுமய, நாட்டிற்குள் போதைப்பொருள் வருகை
தொடர்பில் அண்மைக்காலமாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது.
எவ்வாறாயினும், தமது கட்சியின் மத்திய
செயற்குழு இன்று முற்பகல் கூடுவதுடன், நாளைய தினம் கலந்துரையாடல்களை
மேற்கொண்டு தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர்
நிஷாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்தார். இந்த நிலையில், தேசிய சுதந்திர
முன்னணி இன்று முற்பகல் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக அந்த முன்னணியின்
அரசியல் சபை உறுப்பினர் மொஹமட் முசம்மில் குறிப்பிட்டுள்ளார்.-Hiru
0 comments:
Post a Comment