சென்னை
அணியில் அபாரமாக விளையாடிய வேய்ன்ஸ்மித் அரைசதம் அடித்து அசத்தினார்.
வேய்ன்ஸ்மித் 51 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சர், உள்பட 79 ரன்கள்
எடுத்து ஆட்டமிழந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி
பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஐ.பி.எல். சீசன் 7-ல் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான
போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை
தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி
அணி நிர்ணயிக்கப்பட்ட 20
ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில்
திணேஷ் கார்த்திக் 36 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 51 ரன்கள்
எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து 179 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன்
களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள்
எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
0 comments:
Post a Comment