• Latest News

    May 07, 2014

    ஹம்பாந்தோட்டை நகர மேயர் பொலிஸில் சரணடைந்தார்

    ஹம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்னான்டோ பொலிஸில் சரணடைந்துள்ளார். ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு சரணடைந்த அவரிடம், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

    தாக்குதல் சம்பவம் தொடர்பில் காலி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி மதுரட்ட தலைமையில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஹம்பாந்தோட்டை நகர மேயர் கைத்துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படங்கள் செய்திகளில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹம்பாந்தோட்டை நகர மேயர் பொலிஸில் சரணடைந்தார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top