பொஸ்வானாவின், கபரோன் நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் நீதியமைச்சர்களின் மாநாட்டில் இலங்கைத் தூது குழுவிற்கு தலைமை தாங்கும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பொஸ்வானாவின் நீதியமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நெடலு செரட்ஸேவையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின் போது சட்டம் தொடர்பான பாஸ்வா ஒத்துழைப்பு பற்றி ஆராயப்பட்டது. வர்த்தக, தொழில் முயற்சிகளில் பயனுள்ள முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ளுமாறும் அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார். அதேவேளை, இந்த மாநாட்டின் போது எழுப்பப்பட்ட பிரச்சினையொன்று தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் விளக்கமளிக்கும் படத்தையும் இங்கு காணலாம்.


0 comments:
Post a Comment