• Latest News

    May 26, 2014

    ஒரு பாமரனின் ஒப்பாரி...!!

    ஆதம்பாவா வாக்கீர் ஹுசைன் – நிந்தவூர்.
    இன்னமும் நாம் அல்லது நான் ஒரு மீண்டு வர முடியாத ஒரு கற்பனை உலகில் வாழ்வது போலவே சிலர் இன்னமும் நினைத்து கொண்டிருக்கின்றனர். அது ஒரு வேளை அவர்களின் எண்ணம்,அது சரியாகக்கூட இருக்கலாம் அல்லது பிழையாகக்கூட இருக்கலாம்.
     
    இங்கு எனக்கு இது பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. ஆனால் கவலை எல்லாம் எப்படி நாம் அதை அவ்வளவு விரைவாக மறந்துவிடுகிறோம் என்பது தான்.
    நீங்கள் என்னை பற்றியோ அல்லது என் கொள்கை பற்றியோ என்ன சொன்னாலும் எனக்கு அதை பற்றி அக்கறை இல்லை..நாங்க எவ்வளவு மன்றாடி கேட்ட பிறகும் , நீங்கள் எடுத்த முடிவு அது கடைசியில் மக்கள் எண்ணம் போலவே இருக்கு என்பது வேடிக்கை.
     
    கட்சியை பிளவிலிருந்து காப்பாத்துவது அல்லது அப்போதிருந்த நெருக்கடி மூலமே நாம் அரசுடன் சேர்ந்தது என்று அடிக்கடி தலைவர் சொல்லி அனுதாபத்தை அள்ள முயற்சிப்பது மேலும் மேலும் அவர் மீது பரிகாசத்தையே ஏற்படுத்துது...
     
    சரி, சரி, ஆமா , நீங்க சொல்றத நாங்க அப்படியே நம்புறம் ஆனா ஏனோ தெரியல்ல அதுக்கு முன்னாடி இதெல்லாம் உங்க கிட்ட கேக்கணும் என்று எனக்கு நெடு நாள் ஆச...!!
     
    1. கட்சியை பிளவிலிருந்து காப்பற்றதான் நீங்க அரசுடன் சேர்ந்தது என்றால், அப்ப இன்னமும் கட்சி துரோகிகளையும் , காட்டி கொடுப்பவர்களையும் கட்சி அதிகமாகவே கொண்டுள்ளது என்று கருதலாமா? 

    அப்படியானவர்களை ஏன் நீங்கள் சமூகத்துக்கு அடையாளம் காட்ட வில்லை ( இங்கு முக்கியம் அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட மரத்துக்கு வாக்களித்தவர்கள் நீங்கள் அரசுடன் இருப்பதற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது )
    அல்லது , இதற்கு முன் கட்சி பிளவுபடவே இல்லையா ?? அவ்வாறு பிளவு பட்ட ஒவ்வொரு தடவையும் மக்கள் மேலும் மேலும் உங்களை ஆதரிக்கத்தான் இல்லையா ??
    கட்சியின் தலை என வர்ணிக்கப்பட்ட சேகு இஸ்சடீனை விடவா அவர்கள் போராளிகள்.
     
    2. சரி, பிளவிலிருந்து காப்பாற்ற சேர்ந்தீர்கள் என்றால், இப்போது என்ன ஆயிற்று?? இன்னமும் ஏன் இந்த அரசுடன் ஒட்டி இருக்க வேண்டும்.
    அப்படி எனில் உங்களுக்கு கட்சியில் உள்ள அந்த துரோகிகளுக்கு பயமா அல்லது அவர்களை கட்டி ஆளும் ஆளுமை உங்களிடம் இல்லையா ??
     
    3) ஒரு வேளை, வெளியேறினால் அரசு பொய்யான குற்றம் உங்கள் மேல் சுமற்றி உள்ளே தள்ளும் என்ற பயமா???
    நீங்கள் களங்கம் அற்றவர் எனில் ஏன் அதையும் எதிர் கொள்ளக்கூடாது?? அது மக்கள் மீது குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீது உங்கள் மதிப்பை மென்மேலும் அதிகரிக்கும் அல்லவா???
     
    4) விலகிவிட்டால், ஆக குறைந்தது அரசுடன், அமைச்சரவை கூட்டம்களில் பேச முடியாது அல்லது அரச தலைவருடன் பேச முடியாது என்று ஒரு சமாளிப்பு வார்த்தை உங்கள் கட்சியால் சொல்லப்படுகின்றது. அப்படி எனில் இதுவரை என்ன ஒரு காத்திரமான நடவடிக்கை அல்லது ஒரு தற்காலிகமான ஒரு தீர்வை ஏனும் பெற்று கொடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு முறையும் எதாவது உப்பு சப்பற்ற அரசியல் கூட்டம்களில், அதுவும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளில் மாத்திரமே இவாறு பேச முடிகிறது , அது ஏன்???
     
    5) அரசுடன் விலகினால், கட்சியை விட்டு பிரிந்து செல்லுவதாக உள்ள அவர்களை இன்னும் ஏன் நீங்கள் பகிரங்கப்படுதவில்லை??? அவ்வாறு செய்யும் போது மக்களுக்கும் யார் துரோகி, யார் போராளி என்று பிரித்து அறிய முடியும் அல்லவா???
    6) ஒவ்வொரு தேர்தல்களிலும் அரசை நீங்கள் ஆப்பிழுத்த குரங்கு, ஆப்பிழுத்த குரங்கு என்று சொல்லியும், பின் அதாவது அரசின் மூக்கணாங்கயிறு எங்களிடம்தான் உள்ளது என்று சொல்லி வார்த்தை ஜாலம் இடுவது மக்களை உசுப்பேத்தவா ? இல்லை உணர்ச்சியை தூண்டி வாக்கு பறிக்கவா ??
     
    இப்படி எல்லாம் பேசியும் , கடைசியில் மூக்கணாங்கயிறு உங்களிடம் இல்லாமல் போவதும், நீங்கள் சொல்லிய அந்த ஆப்பிழுத்த குரங்காக ஒவ்வொரு முறையும் நாங்கள் மாறுவதும் உங்களுக்கு வேடிக்கையாக உள்ளதா????
     
    7) எதிர் வரும் தேர்தலில் , என்ன வித்தையை அல்லது , கட்டுகதையை சொல்லி நீங்கள் வாக்கு கேட்க போகிறீர்கள் என்று வாக்களிக்கும் நாங்கள் தெரிந்து கொள்ள்ளலாமா ?? ஏன் எனில் அதற்கு ஏற்றாற்போல எங்கள் குரங்கு புத்தியை மாத்துவதற்கு.
     
    8) இறுதியாக , எதிர்வரும் தேர்தல்களிலும் எங்கள் வாக்குகளை பெற்று அரசுடன் சேர்வீர்களா?? அல்லது சேராதது போல நடித்து பின் சேர்வீர்களா??
    இவை எல்லாம் நா சொல்றது ஏன் எண்டா எசமான்....என்ன செஞ்சாலும் மக்கள் மத்தியல அந்தாளுக்கு (மறைந்த தலைவர் ) இருக்கிற மதிப்பும் மரியாதையும் தான் .....
    ஒரு பாமரனிடம் இருந்து கஜ புல ராஜாதி ராஜ , ராஜ குலோதுங்கவுக்கு ஒரு இது....!!
     
    அதாங்க ஒரு கடிதம் !!(இடையில மானே தேனே இதெல்லாம் நீங்க போட்டுகங்க)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரு பாமரனின் ஒப்பாரி...!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top