• Latest News

    May 08, 2014

    தம்புள்ள ஹைரியா ஜூம்ஆ மஸ்ஜித்?

    சஹீத் அஹமட் : அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக     இயங்கி வரும் தம்புள்ளை  ஹைரியா ஜூம்ஆ மஸ்ஜித்தின் இருப்புக்கு கடந்த இரு திங்களாக அச்சுறுத்தல் அதிகரித்திருந்த நிலையில் இன்று நகர அபிவிருத்தி அதிகார சபையினரே அல்லது அவர்களை  வழிநடாத்தியதாக தெரிவிக்கப் படும் சுமங்கள தேரரோ அங்கு வரவில்லை என மஸ்ஜிதின் நிர்வாக உறுப்பினர் இல்யாஸ் ஹாஜியார் தெரிவித்தார்.
    கடந்த இரு ஆண்டுகளாக அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் ஹைரியா ஜூம்ஆ மஸ்ஜித் கடந்த இரு திங்களாக பலமான அச்சுறுத்தலை எதிர்கொண்டது ,  புனித பூமி அபிவிருத்தி என பெயரில்  மஸ்ஜிதை ஊடறுத்து செல்லும் முகமாக புதிய பாதை ஒன்றை ஏற்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த இரு திங்களாக மஸ்ஜிதின் இரு பக்கங்களில் இருந்தும் புல்டோசர்கள் போடப்பட்டு சில   கட்டிடங்கள் மற்றும்  ,மரங்கள் அகற்றப்  பட்டுள்ளன .
    தற்போது இரு பக்கங்களில் இருந்தும் அகன்ற வீதி ஒன்றுக்கான மரங்கள் ,கட்டிடங்களை  அகற்றும் நடவடிக்கை இடம்பெற்று பெரும்பாலும் முடிந்துள்ள நிலையில் நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிடபட்டுள்ள வீதிக்கு நடுவே தற்போது மஸ்ஜித் கொண்டுவரப்பட்டுள்ளது .
    அதாவது குறித்த மஸ்ஜித் சுமங்கள தேரரின் வழிகாட்டலில் நகர அபிவிருத்தி அதிகார சபையினர் உருவாக்கி வரும் அகன்ற வீதியின் நடுவே மஸ்ஜித் இப்போது குறுக்காக  வீதியை மறைத்து கொண்டு நிற்கிறது .
    வீதியை முழுமையாக்க இந்த மஸ்ஜித்  உடைக்கப்படவேண்டும் அல்லது புதிய வீதி நிர்மானத்  திட்டத்தை கைவிட வேண்டும். அல்லது மஸ்ஜிதுக்கு மேலாக மேம்பாலம் நிர்மாணிக்க வேண்டும் இதில் எது இடம்பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .
    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தம்புள்ளை விகாராதிபதி சுமங்கல தேரரின் தலைமயில் பள்ளியை முற்றுகை இட்டு தாக்கியவர்கள் அன்று கூறியது இதுதான் இன்று போகிறோம் மீண்டும் வருவோம் என்று இவர்கள் மீண்டும் வந்துள்ளார்கள் .சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்ற இந்த மஸ்ஜித் புனித பூமிக்கான நகர அபிவிருத்தி என்ற போர்வையில் அழிக்கப் பட போகிறதா என முஸ்லிம்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
    dampu

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தம்புள்ள ஹைரியா ஜூம்ஆ மஸ்ஜித்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top