• Latest News

    May 29, 2014

    கல்முனை மாநகரசபையில் இந்திய பிரதமருக்கு வாழ்த்து.

    எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்;
    இந்தியாவின் 15–வது பிரதமராக நேற்று நரேந்திர மோடி பதவி ஏற்றார். இப்பதவி ஏற்பு நிகழ்வுக்கு இலங்கையின் ஜனாதிபதி உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கு கொடிருன்தனர்.

    நாட்டின் பிரதமராக ஜனாதிபதி மாளிகையில் மோடி பதவியேற்ற போது

    மே 16ந் தேதி இந்திய மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கினார்கள். அவர்கள் வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் நிலையான ஆட்சிக்காக தங்கள் கட்டளையை பிறப்பித்துள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும் எங்களது முயற்சிக்கு மக்களாகிய உங்களது ஆதரவையும், ஆசிர்வாதங்களையும், பங்களிப்பையும் வழங்குங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
    மேலும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தியாவின் புகழ்மிக்க எதிர்காலத்தை உருவாக்குவோம். உலகில் அமைதியையும், வளர்ச்சியையும் உருவாக்க பாடுபடும் பன்னாட்டு சமூகத்திற்கு நாமும் நமது சிறப்பான பங்களிப்பை வழங்குவோம் என்று மோடி தனது கருத்தையும் தெரிவித்திருந்தார்


    இவ்வாறான சூழலில் இன்று கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமைவு முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் கூடிய போது விசேட வேண்டுகோள் ஒன்றை சபைக்கு விடுத்த முதல்வர் நிஸாம் காரியப்பர், தமது அண்மைய நாடான இந்தியாவில் இடம்பெற்ற ஜனநாயக தேர்தலின்போது இந்திய வரலாற்றில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் உள்நாட்டில் சிறப்பான செயத்திட்டன்களை மேற்கொள்ளும் என்றும் அதேவேளை அண்டைய நாடுகளுடனும் இணைந்து செயற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்த அதேவேளை கல்முனை மாநகரசபையின் வாழ்த்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பிவைப்பதற்கு சபையின் அனுமதியை கோரியபோது சபை ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியது.


    இதன்போது கருத்து தெரிவித்த கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம் தான் சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்தை தெரிவிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையானது உள்நாட்டிலும் ஏன் இலங்கையிலும் தாக்கங்களை கொண்டுவர வாய்ப்புள்ளதாவும் தெரிவித்தார். 


    சபையின் முழு அங்கீகாரம் கிடைத்துள்ளதால் இந்திய தூதரகம் ஊடாக கல்முனை மாநகரசபையின் வாழ்த்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகரசபையில் இந்திய பிரதமருக்கு வாழ்த்து. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top