• Latest News

    May 29, 2014

    கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சிராஸின் ஆசனம் இன்றுடன் வெற்றிடமாகிறது : முதல்வர் நிஸாம் காரியப்பர்

    எம்.வை.அமீர்இஎம்.ஐ.சம்சுதீன்;
    கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் அவர்கள் வகித்த முதல்வர் பதவியை கணவான் ஒப்பந்தத்தின் கீழ் ராஜினாமா செய்யுமாறு முஸ்லிம் காங்கிரசின் தலைமை கேட்டுக்கொண்டதர்க்கினங்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர்  கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் அவர்களுக்கும் முஸ்லிம் காங்கிரசிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக முஸ்லிம் காங்கிரசை விட்டு விலகி அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டதுடன், தனது முஸ்லிம் காங்கிரசினுடனான உறவை துண்டித்துக்கொண்டதுடன் தன்னிடம் இருந்த மாநகரசபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக  முஸ்லிம் காங்கிரசின் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.
    இன்று கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களது தலைமையில் இடம்பெற்ற போது விசேட அறிக்கை ஒன்றை சபைக்கு தெரிவித்த முதல்வர் நிஸாம் காரியப்பர் முன்னாள் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் அவர்கள் தனது மாநகரசபைக்கான உறுப்புரிமையை ராஜினாமா செய்வதாக முஸ்லிம் காங்கிரசின் செயலாளருக்கு அறிவித்திருந்த போதிலும் அது மாநகரசபை சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளக்கூடயதாக இருக்கவில்லை என்றும், தற்போது அவர் எவ்வித அறிவித்தல்களும் இல்லாமல் மூன்று சபை அமர்வுகளுக்கு வருகை தராததன் காரணமாக அடுத்த சபை அமர்வுக்கு அழைக்கப்படாமல் அவருடைய ஆசனம் வெற்றிடமாக உள்ளதாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதன் பிரகாரம் சிராஸ் வகித்த மாநகரசபை உறுப்பினர் வெற்றிடத்துக்கு முஸ்லிம் காங்கிரசின் பட்டியலில் அடுத்த படியாக இருப்பவருக்கு குறித்த மாநகரசபை உறுப்பினர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சிராஸின் ஆசனம் இன்றுடன் வெற்றிடமாகிறது : முதல்வர் நிஸாம் காரியப்பர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top