சர்வதேச விசாரணையை தவிர ஐ.நா.வின் அனைத்து
கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அறிவித்துள்ளார். ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்
ஷேஜி கிஹாராவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்
எந்த வகையில் இலங்கைக்கு உதவும் என்று ஜப்பான் குழு ஒன்றை அமைத்து
ஆராய்ந்திருந்தது. எனினும் இந்த தீர்மானம் இலங்கைக்கு உதவாது என்பதை
ஜப்பான் பின்னர் புரிந்து கொண்டது. இந்த நிலையிலேயே தீர்மானம் மீதான
வாக்கெடுப்பில் ஜப்பான் கலந்துக் கொள்ளவில்லை என்று ராஜபக்சேவிடம் கிஹாரா
கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ராஜபக்ச, இதனை மற்ற
நாடுகளுக்கும் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதோடு, சர்வதேச
விசாரணையை தவிர ஐ.நா.வின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்ற தயார் என்று
தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இறுதிக் கட்டப்போரில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றி சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-TM

0 comments:
Post a Comment