சஹீத் அஹமட்:
அமைப்பின் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி (BJP) வெற்றி பெற்றுள்ளமை தொடர்பிலும் அவர் பிரதமராக தெரிவானமை தொடர்பிலும் பொது பல சேனா மிகவும் மகிழ்ச்சியடைகின்றது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது .
மோடியின் வெற்றி இந்தியாவில் மட்டுமல்லாது குறிப்பாக ஆசிய பிராந்தியத்திலும் செல்வாக்கு செலுத்துவதுவதுடன் உலகின் ஏனைய பகுதிகளிலும் பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் செல்வாக்கு செலுத்துவதுவ நிச்சயம் என பொது பல சேனாவின் பிரதானி டிலண்ட விதாரன தெரிவித்துள்ளார்
மேலும் அவர் ,நாங்கள் இந்த பிரதமரினால் இந்த பிராந்தியத்தில் இயங்கும் பயங்கரவாதம் , பிரிவினைவாதம் ஆகியவற்றை அழித்து விட முடியும் என்று நம்புகிறேன். எனவும் டிலண்ட விதாரன தெரிவித்துள்ளார்.
இந்து மத வாத கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது அதை வழிநடாதியதாக பேசப் படும் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்தும் மோடி குஜராத்தில்
ஐந்தாயிரம் முஸ்லிம்கள் படுகொல்லை செய்யப்பட்டமை தொடர்பில் பிரதான
சூத்திரதாரியாக குற்றசாட்டுக்களை எதிர்கொண்டவர் . இவரின் தெரிவு இந்திய
முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி இந்து சமுத்திர பிராந்தியத்தில்
அமைத்திருக்கும் நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்
பட்டுவரும் நிலையில் கடும்போக்கு பெளத்த அமைப்பான பொது பல சேனா இவரின்
வெற்றியியால் மிகவும் மகிழ்ச்சி அடைதுள்ளதாக அறிவித்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி ஆசிய பிராந்தியத்துக்கு ஒரு இருண்ட காலத்தை கொண்டு வரும் என அமைச்சர் வாசு தேவ நாணயக் கார தெரிவித்துள்ளதையும் கடும்போக்கு பெளத்த அமைப்பின் பிரதானி டிலண்ட விதாரன கடுமையாக விமர்சித்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி ஆசிய பிராந்தியத்துக்கு ஒரு இருண்ட காலத்தை கொண்டு வரும் என அமைச்சர் வாசு தேவ நாணயக் கார தெரிவித்துள்ளதையும் கடும்போக்கு பெளத்த அமைப்பின் பிரதானி டிலண்ட விதாரன கடுமையாக விமர்சித்துள்ளார்.
0 comments:
Post a Comment