• Latest News

    May 18, 2014

    நிந்தவூர் உலமா சபையினால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்' ஆலோசனையும், பாராட்டும்

    சுலைமான் றாபி ;
    கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நிந்தவூரில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான 45 மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டலும், அவர்களுக்கான ஆத்மீக கொள்கை பரப்பும் அதனுடன் இணைந்ததாக அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு உலமா சபையின் நிந்தவூர் கிளையின் தலைவர் அஷ்-ஷேஹ் மௌலவி எம்.ஐ. ஜௌபர் அவர்களின் தலைமையில் இன்று 18.05.2014 நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் இடம்பெற்றது. 
     
    இந்நிகழ்வில் பிரதம வளவாளராக மௌலவி அஷ்-ஷேஹ் எம்.எல். முபாறக் (மதனி), பாலமுனை வைத்தியசாலையின் உளவள ஆலோசகர் ஏ. மனூஸ் ஆகிறோர்கள் கலந்து கொண்டு விரிவுரை செய்தனர். இதேவேளை இந்நிகழ்வில் அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.ஏ.எம். றியாஸ், தென்கிழக்குபல்கலைக்கழக விரிவுரையாளர்களான ஏ.எல்.எம்.ஏ. சமீம், ஏ.ஹலீம், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம், மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 

    நிகழ்வின் இறுதியில் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நிந்தவூரில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான 45 மாணவர்களைப்  பாராட்டி  நினைவுப்பரிசில்களும் அதிதிகளால் வழங்கி  வைக்கப்பட்டன.  











    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் உலமா சபையினால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்' ஆலோசனையும், பாராட்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top