மாத்தளை மாவட்டம், தம்புள்ளையில் சர்ச்சைக்குரிய
முஸ்லிம் பள்ளிவாசலுக்கு பொருத்தமான மாற்றுக் காணி ஒன்றை வழங்க அரசாங்கம்
முன்வந்ததாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை, பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும், நகர
அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த
பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
பேச்சுவார்த்தையின் போது தமக்கு பொருத்தமான காணியை
வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வந்ததால், தாம் அப்படியான ஒரு
சூழ்நிலையில் அங்கிருந்து வெளியேற தயார் என்று அவர்களிடம் தெரிவித்ததாக,
பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவர் அஹமட் லெப்பை அவர்கள் பிபிசியிடம்
கூறினார்.
BBC -

0 comments:
Post a Comment