• Latest News

    May 08, 2014

    சிறுபான்மையினர் மீதான தாக்குதல் முழு நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் : அமெரிக்க தூதுவர்

    இலங்கையில் சிறுபான்மையினத்தவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் முழு நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார்.
    மத ஸ்தளங்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல வகையில் இலங்கையிலுள்ள சிறுபான்மையினத்தவர் மீது பல்வேறு வகையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் இந்த செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்
    இலங்கையில் சிறுபான்மையினத்தவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் குறித்து அமெரிக்கா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளர்
    அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிட செயலமர்வின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பு – 07 இலுள்ள ஹெக்டர்கொப்பேகடுவ நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    இந் நிகழ்வில் வை.எம்.எம்.ஏ தலைவர் கே.என்.டீன் திட்டத்திற்கான தலைவர் ஹலீம் ஏ.அசீஸ், மற்றும் வை.எம்.எம்.ஏ உறுப்பிணர்களும் கலந்து சிறப்பித்தனர்.
    படங்கள் அஸ்ரப் ஏ சமத்:
    7 6 4 3 5 2 1
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறுபான்மையினர் மீதான தாக்குதல் முழு நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் : அமெரிக்க தூதுவர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top