
எனவே, முழு தெற்காசியாவில் யுத்த மேகங்கள்
சூழும் காலம் வெகு தொலைவில் இல்லை. தீவிரவாத இந்துத்துவ கொள்கை கொண்ட மோடி
தெற்காசியாவை மோதல்கள் வலயமாக மாற்றுவார் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
எச்சரித்துள்ளது .
மேலும் அவர் தகவல் வெளியிடுகையில்,
சீனாவுடனான இலங்கையின் நட்புறவை நரேந்திர மோடி ஒருபோதும்
விரும்பப்போவதில்லை. எனவே, எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிரான மோடியின்
அரசியல் காய் நகர்த்தல்கள் அதிகரிக்கும். மேலும், அமெரிக்காவின்
நிகழ்ச்சி நிரலையே தெற்காசியாவில் மோடியின் அரசாங்கம் முன்னெடுக்குமென்றும்,
இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தனிப் பெரும்பான்மை பலமிருப்பதனால்
ஜெயலலிதாவின் அழுத்தங்கள் எடுபடப் போவதில்லையென்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு
பிழையானது. ஏனென்றால் இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசும் ஜெயலலிதாவும்
இலங்கையின் பிரிவினையை ஏற்படுத்தும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கே
துணை போனார்கள்.
எனவே, இந்தியாவின் மோடியின் அரசாங்கமும்
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கும். அதற்கு ஜெயலலிதாவும்
துணைபோவார். இதனை புரியாது அரசு தப்புக் கணக்கு போடுகிறது. அத்தோடு
தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் அமெரிக்கா அதற்காக
மோடியைப் பயன்படுத்தும். ஏனென்றால் மோடியும் சீனாவுக்கு எதிரானவர். இதனால்
இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள நட்புறவை தகர்ப்பதற்கு இலங்கைக்கு எதிரான
அனைத்து நடவடிக்கைகளையும் மோடி அரசு மேற்கொள்ளும்.
இங்கு பிரிவினையை ஏற்படுத்துவதற்காக
முயற்சிக்கும் சக்திகளுக்கு இந்தியாவும் சீனாவும் துணைபோகும். இது
ஒருபுறமிருக்க மோடி இன்னும் கொஞ்ச நாட்களில் பாகிஸ்தானுக்கு எதிராக போரை
ஆரம்பிப்பது நிச்சயமாகும்.
எனவே, முழு தெற்காசியாவில் யுத்த மேகங்கள்
சூழும் காலம் வெகு தொலைவில் இல்லை. தீவிரவாத இந்துத்துவ கொள்கை கொண்ட மோடி
தெற்காசியாவை மோதல்கள் வலயமாக மாற்றுவார்.
விடுதலைப் புலி ஆதரவாளரான
வைகோவுக்கும் மோடிக்கும் தொடர்புள்ளது. இதுவும் இங்கு பிரிவினைவாத
சக்திகளுக்கு உதவும் நிலைமையை அதிகரிக்கும். எதிர்காலத்தில் எமது நாட்டில்
பயங்கரமான சூழல்களை உருவாக்கும். எனவே, அரசாங்கம் சீனாவுடனான
தொடர்புகளைகவனமாக கையாள வேண்டும். அதைவிடுத்து இந்தியாவையும்
சந்தோஷப்படுத்திக் கொண்டு சீனாவையும் சந்தோஷப்படுத்திக் கொண்டு நடு நிலை
போக்கில், நழுவல்போக்கை கடைப் பிடிக்கலாம் என அரசு நினைக்குமானால் அது
பிழையானதாகும் என்றும் வசந்த பண்டார தெரிவித்துள்ளார் .
0 comments:
Post a Comment