• Latest News

    May 21, 2014

    மே மாதம் மறக்க முடியாததாகும்

    கல்முனை  ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் -
    பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி கோருவோம். அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும்  திட்டமிட்ட இனவாத போக்கினால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகளை அல்லாஹ்விடம் முறையிடுவோம்.

    எம்மைப் படைத்து பரிபாலிக்கும் வல்ல ரப்பிடம் கையேந்தி மன்றாடி எமது சமூகத்தின் மீதான நெருக்கீடுகளை தனித்து எம் சமூகத்தையும் இஸ்லாத்தையும் பாதுகாக்க அருள்புரிய வேண்டுவோம்.
    முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை குறிவைத்து ஏற்படுத்தப்படும் தீ விபத்தானது அளுத்கமையில் இருந்து மாவனல்லைக்கு தாவியுள்ளது. முஸ்லிம்களின் வர்த்தகங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன.

    மாவனல்லை என்றாலே முஸ்லிம்களுக்கு மறக்காத அளவுக்கு அழிவுகளை ஏற்படுத்திய ஆறாத காயங்களே நினைவில் நிற்கின்றன.

    (1)    கடந்த 2014.05.18 அதிகாலை மாவனல்லை முஸ்லிம் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.
    (2)    சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் 2001.05.02 மாவனல்லையில் துவங்கி முழு நாட்டையும் உலுக்கிய பாரிய சிங்கள – முஸ்லிம் கலவரம்.

    கொழும்பு – கண்டி வீதியில் அமைந்துள்ள மாவனல்லை பூட்சிட்டிக்கு முன்னால் உள்ள ஹாட்வெயார் கடையொன்று கடந்த 2014.05.18 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.
    குறித்த நேரத்தில் வெளியூர் செல்ல பஸ்நிலையம் வந்த ஒருவர் ரீகல் ஹாட்வெயார் எரிவது கண்டு அதன் உரிமையாளரான (உயன்வத்த) மஹ்ரூமிடம் தெரியப்படுத்தினார்.

    செய்தியை கேள்வியுற்று ஸ்தளத்திற்கு விரைந்த மஹ்ரூம் தனது கடை எரிவது கண்டு பதறிப்போனார். தீயை அனைக்கும் முயற்சியில் உடனடியான மாவனல்லை பிரதேச சபை தீயணைப்பு பிரிவிடம் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார். அவர்கள்இ தம்மிடமுள்ள தீயணைப்பு இயந்திரங்கள் பழுதடைந்து காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

    அவ்விடத்திற்கு வந்த பொலிசாரின் உதவியுடன் கண்டி தீயணைப்பு பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீப்பற்றிக் கொண்டிருந்த வேளையில் மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு சேவையில் இருந்திருந்தால் தனது சொத்துக்களை காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும் என அதன் உரிமையாளர் கூறுகிறார்.

    கண்டியிலிருந்து தீயணைப்புப் பிரிவினர் வந்து சேரும் வேளை உடமைகள் அனைத்தையும் தீ எப்பமிட்டுவிட்டதென்றே சொல்லலாம் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக தீயினால் அழிந்துவிட்டது. இத்தீயானது மின் ஒழுக்கினால் ஏற்பட்டதொன்றல்ல என சொல்லப்படுகின்றது.

    அவ்வாறு உறுதியாக சொல்லப்படுவதற்கு (1) பின்புரத்திலுள்ள நான்கு புலொக் கற்கள் கழற்றப்பட்டு அருகில் வைக்கப்பட்டுள்ளன என்றும்இ அக்கற்களில் சிறிதளவேனும் நெருப்புப் பட்ட புகை காணப்படவில்லை.. (2) பின்புறத்திலுள்ள களஞ்சிய அறையின் கதவில் ஒரு பகுதி வெட்டி அகற்றி எடுக்கப்பட்டுள்ளது.
    போன்ற இரு காரணிகளையும் வைத்து மாவனல்லை பொலிசார் விசாரனையை துரிதமாக மேற்கொண்டு இத்தீவிபத்துக்கான காரணியையும் அதன் சூத்திரதாரிகளையும் கண்டுபிடித்துவிடுவார்கள் என பொலிசாரை நம்புவது மக்களின் விருப்பமே.
    மாவனல்லையில் முஸ்லிம் கடை தீப்பற்றிக் கொண்டது என்ற செய்திகள் நாடு பூராகவும் பரவிய சந்தர்ப்பத்தில் அதன் தாக்கத்தை அனுபவித்து உணர்ந்த மாவனல்லை முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொண்டார்கள்.

    கடை உரிமையாளர் மஹ்ரூமிற்கும் ஏனைய வர்த்தகர்களுக்கும் இடையில் தகராருகளோ முரண்பாடுகளோ இருந்ததாக எவரும் தெரிவிக்க வில்லை. இருந்தும் சில கதைகள் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தன.

    அதாவதுஇ மாவனல்லை நகரில் மீண்டும் முஸ்லிம்களின் ஆதிக்கம் வர்த்தக ரீதியாக அதிகரித்து வருவதாக அண்மையில் மாவனல்லை நகரில் பொதுபலசேனா அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தெரிவித்தார்கள் எனவும்இ மவனல்லை நகரில் முஸ்லிம் வர்த்தகர்களை மிரட்டி கப்பம் பெறுவதாகவும் கூறப்பட்டது.

    அதே வேளை சிங்கள மத அனுஷ்டான நிகழ்வுகளுக்கும் முஸ்லிம் வர்த்தகர்கள் நிதியுதவி செய்து சகவாழ்வு வாழ்ந்து வருவதாகவும் பேசப்படுகின்றது.

    முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹைவே கொம்ப்லெக்ஸ் பில்டிங்கில் அமைந்துள்ள ரீகல் ஹாட்வெயார் தீ வைத்துவிட்டு இலகுவாக தப்பிச் செல்லக்கூடிய இடமொன்றில் அமைந்துள்ளது எனவும் கருதப்படுகின்றது.

    கடந்த 2001.04.30 திங்கட்கிழமை இரவு 8.45 மணியளவில் மாவனல்லை பஸ் நிலையத்தில் 24ம் இலக்க     ஹோட்டலை  அதன் உரிமையாளர் மூட ஆரம்பமாயிருந்தார். அவ்வேளை சில காடையர்கள் கோல்லிப் ஐ கப்பமாகக் கேட்டு உரிமையாளரை மிரட்டினார்கள். கோல்லிப் இல்லை என ஹோட்டல் உரிமையாளர் சொன்னார்.

    ஆத்திரமடைந்த அவர்கள் உரிமையாளரிடம் காசை தூக்கியெறிந்து கோல்லிப் கேட்டும் உரிமையாளர் கோல்லிப் இல்லை பிரிஸ்டல் இருக்கிறது என சொன்னார். பிரிஸ்டலுடன் மீதிப்பணத்தைப் பெற்றுக் கொள்ளும்போது அவர்கள் உரிமையாளரை தகாத வார்த்தைகள் கொண்டு ஏசினார்கள்.

    ஏசுவதற்கான காரணத்தை உரிமையாளர் அவர்களிடம் கேட்க அவர்கள் ஹோட்டலினுள் இருந்த மூவரையும் தாக்கி பின்னர் உரிமையாளரை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகாமையில் இருந்த கம்பியொன்றில் கட்டிவைத்து சித்திரவதை செய்தார்கள்.

    மக்கள் திரலாக கூடியிருந்தார்கள். மக்கள் காணக்கூடியதாக உரிமையாளரின் முகத்தில் கத்தியினால் வெட்டி 'முடியுமானால் எந்த முஸ்லிமாவது இவனைக் காப்பாற்றிச் செல்லு' என சவால் விடுத்தனர். பின்னர் பொலிசார் உரிமையாளரை காப்பாற்றி மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

    மாவனல்லை நகரில் கப்பம் கேட்கும்போதெல்லாம் சிறு சிறு முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு. என்றாலும் இப்பிரச்சினை இவ்வளவு பாரதூரமாக கொண்டு சேர்க்குமென எவரும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறான அக்கிரமங்களையும் அநியாயங்களையும் பொறுத்துக் கொண்டே மாவனல்லை முஸ்லிம்கள் இருந்தார்கள்.

    மேற்படி சம்பவத்திற்கு பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையை அறிவதற்காக அடுத்த நாளான 2001.05.01 செவ்வாய்க்கிழமை பெருமளவிலான முஸ்லிம்கள் மாவனல்லை பஸ்நிலையத்தில் ஒன்றுகூடியிருந்தனர். முஸ்லிம்களின் அக்கூட்டத்தைக் கண்டு சிங்கள மக்களும் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே கூடி நின்றார்கள். இந்நிலையை உணர்ந்த பொலிசார் நாளை (2001.05.02) காலை வரை அவகாசம் கேட்க முஸ்லிம்கள் கலைந்து சென்று விட்டார்கள்.

    மறுநாள் 2001.05.02 புதன்கிழமை பொலிசார் பொருந்திக் கொண்டதற்கிணங்க நியாயமாக நடக்கவில்லை. பொலிசார் நியாயமாக நடக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் வர்த்தகர்கள் ஒன்று சேர்ந்து பொலிசாருக்கு எதிராக மறியல் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.

    நீதி கேட்டு பொலிசாரிடம் வந்த முஸ்லிம்கள் மீது பொலிசார் எதிர்பாராத விதமாக தாக்கினர். இச்சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திய சிங்கள இனவாதிகள் கலவரத்தை உண்டு பண்ணினார்கள்.

    முஸ்லிம்களை தாக்கி வர்த்தக நிலையங்களை கொள்ளையடித்துஇ தீ முட்டினர். இச்செயற்பாடுகள் அனைத்தும் பொலிசாரின் முன்னிலையிலையே நடந்தேறியிருக்கின்றது.

    மாவனல்லை நகரில் அரங்கேறிய இக்கலவரம் பின்னர் மாவனல்லை நகரை அண்மித்த அரநாயக்கஇ திப்பிட்டியஇ ஹெம்மாத்துக மற்றும் கனேதன்ன போன்ற இடங்களுக்கும் பரவியது.

    இக்கலவரத்தின்போது ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டார். 14 முஸ்லிம்கள் காயப்பட்டார்கள். 148 வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. (இவற்றுள் 30 சிங்கள சமூகத்தவர்களினதும் அடங்கும்) 83 வீடுகள்இ 24 வாகனங்கள்இ 2 ஆடைத் தொழிற்சாலைகள்இ 1 இறப்பர் தொழிற்சாலை மற்றும் நவீன பெற்றோல் நிலையம் ஒன்றும் எரிக்கப்பட்டன.

    இக்கலவரத்தினால் மாவனல்லை முஸ்லிம்களுக்கு பாரியதொரு பொருட்சேதம் ஏற்பட்டது. பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவுக்கு முகம் கொடுத்தார்கள். இக்கலவரம் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் வர்த்தகத்தை குறிவைத்து ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்கள் பெரிதாக மதிக்கும் மார்க்கத்திலும் கை வைக்க தயங்கவில்லை.

    இக்கலவரத்தின் போது ஒரு ஜும்ஆ பள்ளிவாசல் எரிக்கப்பட்டது. மேலும் 6 பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டன. அத்துடன் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டன. இவற்றைக் கண்டு பொறுக்க முடியாத முஸ்லிம்கள் தேசிய ரீதியாக நாட்டின் பல பாகங்களிலும் கொதித்தெழும்பினார்கள்.

    அன்று மாவனல்லையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலையக் கண்டித்து நாடு பூராகவும் கடைகள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. 2001.05.04 அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் முஸ்லிம்கள் தேசிய ரீதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தனர்.

    கொழும்பு புதுக்கடை ஆர்ப்பாட்டக்கார முஸ்லிம்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு ஈற்றில் சண்டையில் முடிவுற்றது. பல மணிநேரம் இடம்பெற்ற இச்சண்டை கொழும்பில் முஸ்லிம்கள் செறிவாகவாழும் இடங்களுக்கும் பரவியது. இந்த அசாதாரண நிலையை போக்க கொழும்பில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது பின்னர் சுமூக நிலைக்குவர சில நாட்கள் எடுத்தன.

    இக்கலவரத்தை பொலிசார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தவறியதினால் இராணுவத்தினரின் உதவியுடன் கலவரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

    மீக நீண்ட காலமாக கட்டிப் பேணிக்காத்துவந்த சிங்கள – முஸ்லிம் உறவு இக்கலவரத்தின் காரணமாக விரிசல் அடைந்தது.

    காலப்போக்கில் சிங்கள – முஸ்லிம் வர்த்தகர்கள் இணங்கி அவர்கள் வியாபார கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மிகவும் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்துவருகின்றார்கள்.

    ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் சில இனவாதிகள் மாவனல்லை நகரில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர் என மாவனல்லைநியூஸ்.கொம் இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த வேளையில் ரீகல் ஹாட்வெயர் எரியுண்டிருக்கின்றது.

    நாட்டில் சிங்கள – முஸ்லிம் கலவரங்களை ஆங்காங்கே ஏற்படுத்தி நாட்டின் அமைதியை சீர்குழைத்து முஸ்லிம்களின் வர்த்தகம் மற்றும் மார்க்கம் ஆகியவற்றிற்கு எதிராக மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் இறைவனிம் உதவிகோருபவர்களாக இருப்போம். பொறுப்பிலுள்ளவர்கள் மிகவும் பொறுப்பாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
       
    கடந்த 2014.05.16 மாவனல்லை முபாரிஸ் கேட்போர்கூடத்தில் முஸ்லிம் அமைப்பொன்றினால் பிரதேச அதிதிகளுக்காக 'நற்செய்தி பெற்று நல்வாழ்வு வாழ்' எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கினைக்கூட சிங்கள இனவாத அமைப்புக்கள் பிழையான கண்ணோட்த்தில் பார்த்திடக் கூடும்.

    எமது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்புக்களும் நாட்டில் முஸ்லிம்களின் இருப்பு, அவர்களுக்கு ஏற்படும் சோதனைகள் என்பவற்றை உணர்ந்து இன்றைய அசாதாரண சூழலில் மார்க்க சம்பந்தமான பிரச்சாரங்களில் மத உணர்வுகளைத் தூண்டாத வகையில் பொறுப்புடன் நாம் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

    மே மாதம் இலங்கை வரலாற்றிலே பல மறக்க முடியாத அழிவுகளையும் வடுக்களையும் கொடுத்துள்ளது. அவற்றுள் நினைவில் நின்ற சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன்.

    (01)    1993.05.01 இலங்கை ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ அவர்கள் கொழும்பில் மே தின ஊர்வலத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலியானார்.

    (02)    2001.05.02  மாவனல்லை சிங்கள – முஸ்லிம் கலவரம்

    (03)    1986.05.03 கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் எயார் லங்கா விமானமொன்றில் குண்டுவெடித்ததால் 21 பேர் பலி

    (04)    2014.05.08 அளுத்கமயில் முஸ்லிம் வர்த்தக நிலையம் எரிக்கப் பட்டது.

    (05)    1505.05.18 போத்துக்கேயர் கொழும்புக்கு வந்தனர்.

    (06)    2009.05.18 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்                               வேலுப்பிள்ளை பிரபாகரன் பலியானதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

    (07)    2014.05.18  மாவனல்லை முஸ்லிம் வர்த்தக நிலையம் எரிக்கப் பட்டது.

    (08)    2009.05.19 இலங்கையில் யுத்தம் முடிவுற்றதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தல்  உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

    (09)    2009.05.19 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அறிவித்தார்.

    (10)    1958.05.22 இலங்கையில் இனக்கலவரம் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

    (11)    1972.05.22 இலங்கையில் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப் பட்டது. இலங்கை குடியரசாகியது. சிலோன் எனும் அதன் பெயர் ஸ்ரீலங்காவாக மாற்றப்பட்டது.

    (12)    1981.05.31 ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் நூல் நிலையம் சுமார் 70இ000 நூல்களுடன் தீக்கிரையாக்கப்பட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மே மாதம் மறக்க முடியாததாகும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top