கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திக் குழுவிற்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்படி பாடசாலையின் நிர்வாகத் தெரிவு கடந்த 30.03.2014 அன்று பாடசாலையில் இடம்பெற்றது. இத்தெரிவு கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு மாற்றமாகவும், முறைகேடாகவும் நடைபெற்றுள்ளதென்று, பாடசாலையின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டினை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் பாடசாலையின் அபிவிருத்திக் குழுவிற்கு இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.
0 comments:
Post a Comment