• Latest News

    November 29, 2013

    இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்கும்: இந்திய கடற்படைத் தளபதி

    இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயற்சிகளை வழங்க இந்திய கடற்படை இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது.
    இந்திய கடற்படைத் தளபதி டி.கே. ஜோஷி , ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது இந்த இதனை தெரிவித்துள்ளார்.
    ஜனாதிபதி மற்றும் இந்திய கடற்படைத் தளபதி ஆகியோர் இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவம் மிக்க கடல் பாதுகாப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

    இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு 4 ஆண்டு தொழிற்நுட்ப பட்டப்படிபை இந்தியா வழங்கும் என ஜோஷி, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
    இந்த தொழில்நுட்ப பட்டப்படிப்பில் தமது கடற்படை அதிகாரிகளை சேர்க்க பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றும் இந்திய கடற்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
    இந்திய பெருங்கடல் பகுதி கடல் கொள்ளைகளை தடுக்க இலங்கை கடற்படை பெரும் பங்களிப்பை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடற்கொள்ளை சம்பவங்கள் அண்மைய ஆண்டுகளாக குறைந்துள்ளன.
    இந்தியாவுக்கு இலங்கையும் விழிப்புடன் இருந்து இந்த நடவடிக்கைகளை தொடரவேண்டும் என்றும் ஜோஷி தெரிவித்துள்ளார்.
    ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய தூதவர் வை.கே. சிங்ஹா உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் ஜயநாத் கொழம்பகே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
    2013 காலில் கலந்துரையாடலில் கலந்து கொள்ள இலங்கை வந்த இந்திய கடற்படைத் தளபதி திருகோணமலை, யாழ்ப்பணம், மன்னார், அம்பாந்தோட்டடை உட்பட முக்கிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்கும்: இந்திய கடற்படைத் தளபதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top