(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி
பிரதேசத்தின் சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலைகளிலிருந்து இம்முறை
இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை
பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று (7)
நடைபெற்றது.
சவளக்கடை பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை
உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.காமினி தென்னக்கோன், நாவிதன்வெளி பிரதேச
செயலாளர் எஸ்.கரன், அன்னமலை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் திருமதி
எப்.அனீஸ், கல்முனை ஹட்டன் நஷனல் வங்கி முகாமையாளர் சிறாஜ் அஹம்மட்,
நாவிதன்வெளி பிரதேச செயலக திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர்
எஸ்.சிறிநாதன், நாவிதன்வெளி பிரதேச சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு
உத்தியோகத்தர் ஏ.எம்.கஸ்பியா பீவி உட்பட பாடசாலை அதிபர்கள், கற்பித்த
ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு குழு
உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டர்.
இதன்போது
கிராம சேவை உத்தியோகத்தராக 38 வருடங்கள் கடமையாற்றிய ஏ.எச்.ஏ.வகாப்
பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.











0 comments:
Post a Comment