• Latest News

    May 14, 2014

    இன ,மதவாத ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக நேரடியாக களத்தில் குறித்த பிரமதர் : Video

    கம்பளை சாஹிராக் கல்லூரியில் வெசாக் நிகழ்வுகள் அனுமதிக்கப் பட்டபோதும் அது போதாது வெசாக் நிகழ்வுகள் அங்கு  ஏற்பாடு செய்யவில்லை என பௌத்தமதகுருமார் தலைமையில் நேற்று கல்லூரியை (Video)
    நோக்கி ஆர்ப்பாட்டக் காரர்கள் ஆக்ரோஷமாக புறப்பட்டு வந்த பொழுது  ஸ்தலத்திற்கு விரைந்த பிரதமர்  தி மு ஜெயரத்ன அவர்கள் சமாதான சகவாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு களத்தில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளார் .

    அத்தோடு நின்று விடாமல் தனது உடல் நிலை,மருத்துவ ஆலோசனைகளையும் பொருட்படுத்தாமல் தனது பொழுது தனது மகன் மத்திய  மாகாணசபை உறுப்பினர் அனுராத ஜயரத்ன மற்றும்  ஆதரவாளர்களுடன் இனங்களுக்கிடையில் சமாதானம் வளர்ப்போம், இனபேதம் எமக்கு வேண்டாம் மதவெறியை ஒழிப்போம் என தானும் கோஷமிட்டவாறு மற்றுமொரு பேரணியை வழி நடாத்திச் சென்றுள்ளார்

     நாட்டின் அமைதி சமாதானம் ஸ்திரத்தன்மைக்காக சமாதான் சகவாழ்விற்காக தனது எதிர்கால வாரிசுடன் பாதையில் இறங்கி  செயற்பட்ட பிரதம மந்திரி சகல தரப்புக்களாலும் பாராட்டப் பட வேண்டியவரே..!

    இது தொடர்பில் தெரிவிக்கப் படுவதாவது இம்முறை வெசாக் பண்டிகைக்கான மத அனுஷ்டானங்களை பௌத்த மத ஆசிரியர்களும், ஊழியர்களும் கம்பளை சாஹிரா பாடசாலையில் பிரித் ஓதி மேற்கொண்டுள்ளனர்.  இதற்கான அனுமதியை அதிபர்  வழங்கியுள்ளார்  இருந்த போதும் பெளத்த ஆசிரியைகள் சிலர்  வெசாக்கூடும பெளத்த கோடி  ஆகியவற்றை கொண்டு பாடசாலை , வகுப்பறை ஆகியவற்றை அலங்கரிக்க முற்பட்டபோது இவற்றை  தவிர்த்து கொள்ளுமாறு அதிபர் வேண்டியுள்ளார் . இந்த தகவல் சேறு விதமாக பிரசாரப் படுத்தப் பட்டு கடும்போக்கு அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் இறகியுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன ,மதவாத ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக நேரடியாக களத்தில் குறித்த பிரமதர் : Video Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top