அரசாங்கத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக அதில் அங்கம் வகிக்கும் 60 அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைய தருணம் பார்த்து காத்திருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.மகாவலி எச் வலையத்தின் விவசாய அமைப்புகளில் தலைவர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு இரசாயன பசளைகளை வழங்க முடியாதுள்ளது.
பசளை நிறுவனங்களுக்கு அரசாங்கம் பல பில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் பசளைகளை கொள்வனவு செய்ய முடியாது எனவும் பீ. ஹரிசன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment