எஸ்.அஷ்ரப்கான் ;
அமைச்சுப்பதவியில் இருப்பதன் மூலமே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற முஸ்லிம் அமைச்சர்களின் கருத்துக்களை உலமா கட்சி வன்மையாக கண்டித்திருப்பதுடன் இக்கூற்று இறைவன் மீதான அவநம்பிக்கையையும், முஸ்லிம் அமைச்சர்களின் கோழைத்தனத்தையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் அல்லாமா, மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அளுத்கமை, பேருவல தாக்குதல்கள் பற்றி கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கு விளக்கும் கூட்டத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரு சமூகம் அடிமைப்பட்ட நிலையில் அரசுக்கு முட்டுக்கொடுப்பதால் சில சில்லறைகளை பெற்றுக்கொள்ள முடியுமே தவிர உரிமைகளையோ பாதுகாப்பையோ பெற முடியாது என்பதை இந்தத்தாக்குதல்கள் நமக்கு தெளிவாக சொல்கிறது. இனவாத அரசின் அமைச்சர்களாக இருப்பதன் மூலம் சமூகத்தை பாதுகாக்க முடியாது என்பதனால்தான் தமிழ் சமூகம் அமைச்சர்களை தூக்;கி வீசியது. அந்த சமூகம் பாரிய துன்பங்களை அனுபவித்த போதும் தமது சுயத்துக்காதன போராட்ட்த்தை கைவிடாதவர்கள் என்பதையும் அரசின் எச்சில் இலைகளுக்கு சோரம் போகாதவர்கள் என்ற கௌரவத்தையும் இன்று பெற்றுள்ளார்கள்.
இந்த நாட்டில் நாம் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக வாழ்கிறோம். இது வரை எம்மை இறைவன்தான் இங்கு வாழ வைத்தான். இந்த சுயநலவாதிகளெல்லாம் அமைச்சர்களாக இருப்பதன் மூலம் எமக்கு பாதுகாப்பு வழங்கவில்லை. ஆனால் எவ்வளவுதான் அடி வாங்கினாலும் அமைச்சுப்பதவிகளை நக்கிக்கொண்டிருப்போம் என்ற அவமான சிந்தனை காரணமாகவே இறைவன் நமது ஈமானை சோதித்துப்hபார்ப்பதோடு இன்னுமாடா இந்த அமைச்சர்களை நம்புகிறீர்கள் என கேட்பது போலும் உள்ளது.
அமைச்சர்களாக இல்லாவிட்டால் வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திக்க முடியாது என்றும் கூறி இவர்கள் சமூகத்தை அப்பட்டமாக ஏமாற்றுகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கென எந்தவொரு அமைச்சரும் இல்லாத நிலையிலும் சர்வதேச ராஜதந்திரிகளை கௌரவமாக சந்தித்து பேசுவதை நாம் காணவில்லையா? 1989 மதல் 94 வரை தலைவர் அஷ்ரப் எதிர்க்கட்சியில்தான் இருந்தார். அப்போது அவர் வெளிநாட்டு ராஜ தந்திரிpகளை சந்திக்கவில்லையா? அந்தக்கால பிரிவில்தான் அவர் தாருஸ்ஸலாத்தையும் கட்டினார் என்பது கூட புரியாதவர்;களாக முஸ்லிம் காங்கிரசினர் உள்ளனர்.
தாம் அமைச்சராக இல்லாவிட்டால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லிய மறுகணமே நோலிமிட் தாக்குதலுக்குள்ளானது. அதே போல் தெஹிவல என தாக்குதல் தொடர்கிறது. அமைச்சர்களாக இல்லாவிட்டால் இவர்களுக்குத்தான் பாதுகாப்பு அற்ற நிலைமை ஏற்படும் என்பதற்கு அஞ்சியே இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு இவர்கள் ஊழல் செய்துள்ளார்கள் என்றே தெரிகிறது. உயிருக்கு அஞ்சும் கோழைகள் முஸ்லிம் சமூகத்தின் தலைமைப்பதவிக்கு அருகதையற்றவர்கள்.
இந்த ஆட்சியில் இத்தகைய கொடூரங்கள் ஏற்படும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன் தம்புள்ள சம்பவத்தின் மூலம் எமக்கு இறைவன் அறிவித்தான். அதன் காரணமாக நாம் அரசிலிருந்து விலகினோம். அரசுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகளில் சமூகத்துக்காக என வெளியேறிய ஒரோயொரு கட்சி நாம் மட்டுமே என்பது வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. எமக்கு எந்த பதவியும் கிடைக்காததால் நாம் வெளியேறியதாக சிலர் அப்பாவித்தனமாக சொல்கின்றனர். ஜனாதிபதியின் அருகில் இருந்த நாம் பதவிகள் இன்றியே எமது சுயநல தேவைகளை பெற முடியும் என்ற அரசியல் கூட புரியாதவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.
அன்று நாம் கிழக்கு மாகாண சபையில் ஐ தே க மற்றும் த தே கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தும் படி கோரினோம். அவ்வாறு செய்தால் சிங்கள முஸ்லிம் கலவரம் ஏற்படுமென சொன்னவர்கள் இந்தக்கலவரத்துக்கு என்ன சொல்லப்போகிறார்கள்? ஆக, அமைச்சுப்பதவிகளுக்கு சோரம் போன முஸ்லிம் காங்கிரசும், ரிசாத் காங்கிரசும், அதாவுள்ளா காங்கிரசும் இன்று கூளுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற நிலையில் ஆப்பு இழுத்த குரங்குகளாக உள்ளார்கள். இவர்களது பதவி வெறிக்காக முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஆதலால் அரசுக்கு முட்டுக்கொடுக்காத முஸ்லிம் எதிர் கட்சியொன்றும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு தேவை என்பதை முஸ்லிம் சமூகம் உணராத வரை நமது உரிமைகளுக்கான ஜனநாயக போராட்டத்தை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாது என்பதை சமூகத்துக்கு சொல்கிறோம்.

0 comments:
Post a Comment