• Latest News

    June 12, 2014

    அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களை பைசால் காசிம் கௌரவித்து பரிசு வழங்கினார் - நுவரெலியாவில் சம்பவம்

    அப்துல் அஸீஸ்;
    காசிமி பவுண்டேஷன் அனுசரணையில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு  சனிக்கிழமை (2014.06.07) நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் சுற்றலா விடுதியில் காசிமி பவுண்டேஷனின் பணிப்பாளர் ஐ.எல்.ஏ. ஹார்லிக் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், காசிமி பவுண்டேஷனின் ஸ்தாபகருமான பைசால் காசீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்;.
     
    இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸதீன் உள்ளிட்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
     
    இதன்போது அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தினால்;  பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படுவதையும், பிரதம அதிதியினால் ஊடகவியலாளர்கள் நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.

















    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களை பைசால் காசிம் கௌரவித்து பரிசு வழங்கினார் - நுவரெலியாவில் சம்பவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top