• Latest News

    June 06, 2014

    பொதுப்பிரச்சினை தொடர்பில் சிலர் தீர்மானம் எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்: அமைச்சர் றிஷாத்

    அமைச்சர் ஊடகப்பிரிவு:
    தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பில் தனிப்பட்ட நபர்கள் முடிவெடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் – அமைச்சர் றிஷாத் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை என்பது பொதுப்பிரச்சினை. அது தொடர்பில் மூன்று  அமைப்புக்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றிணைந்து பள்ளிவாசலை இடமாற்றுவதற்காக தீர்மானம் எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை அறிந்து ஆச்சிரியம் அடைந்ததோடு இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

    இவ்விடயத்தில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில் தம்புள்ளை பள்ளிவாசல் தற்போதுள்ள இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக மூன்று அமைப்புக்கள் பிரச்சினைக்குரிய பௌத்த மதகுருவுடன் பள்ளிவாசலை இடம்மாற்றுவது தொடர்பாக பேச்சு நடத்தி உடன்பாடு கண்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைக்கண்டு ஆச்சிரியம் அடைந்தேன் அத்தோடு இது வன்மையாக கண்டிக்க படக்கூடியதாகும். தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தனிப்பட்ட பிரச்சினை அல்ல.

    இது பொதுவான ஒரு சமூகத்தின் பிரச்சினையாகும். இது தொடர்பாக அங்குவாழும் முஸ்லிம் மக்களின் விருப்பங்களுக்கு அமையவே தீர்மானம் எடுக்க வேண்டும். அதை விடுத்து எவருக்கும் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க முடியாது. அதற்கு இடமளிக்க மாட்டோம்.

    கடந்த வருடம் கிராண்பாஸ் பள்ளிவாசல் பொலிசார் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தாக்கப்பட்டது. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பின்னர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஒரு மதத்தலைவரும் மற்றும் இரண்டு மதங்களை சார்ந்த அரசியல் தலைவர்களும் பேச்சுக்களை நடத்தி இரண்டு மாத காலத்துக்குள் அதிலுள்ள ஆறு பேரச் காணியைப்பெற்று பழைய பள்ளிவாசலை புணரமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. அனால் அன்று வழங்கப்பட்ட வாக்குறுதியும் தீர்மானமும் காற்றில் பறக்கவிடப்பட்ட. முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு தெரியாமல் குழு ஒன்று இரகசியமாக பேச்சுக்களை நடத்தி தீர்வொண்டை பெற்றிருப்பதாக கூறப்படுவது பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

    தம்புள்ளை பள்ளிவாசள் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். எனவே, அவசரப்பட்டு எடுக்கும் முடிவினால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு மட்டுமல்ல ஏனைய பாதுகாப்பிற்கும் ஆபத்தானதாக அமையும். எனவே நிலைமைகளை உணர்ந்து செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என்று அமைச்சர் றிஷாத் தெரிவித்தார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுப்பிரச்சினை தொடர்பில் சிலர் தீர்மானம் எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்: அமைச்சர் றிஷாத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top