சஹாப்தீன் ;கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றஹீப் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக சற்று முன்னர் தொலைபேசியின் தி முரசுக்கு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைவாகவே தான் வகிக்கும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ய இருப்பதாகவும், அதற்கான கடிதத்தினை விரைவில் கட்சியின் செயலாளருக்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை, கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஏ.எம்.பிர்தௌஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அடுத்த வாரம் நியமிக்கப்பட இருக்கின்றார். பிரதி மேயருக்காக பிர்தௌஸின் பெயரை கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக மு.காவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment