• Latest News

    June 27, 2014

    கல்விப் பணிப்பாளர் சௌதுல் நஜீமுக்கு பாராட்டும், கௌரவிப்பும்

    .எம்.எம்.ஏ.காதர்;
    சம்மாந்துறை கல்வி வலயத்தின் புதிய கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்படடுள்ள மருதமுனையைச் சேர்ந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி  எம்.எஸ்.சௌதுல் நஜீம், அவர்களை கௌரவித்த நிகழ்வு மருதமுனை செஸ்டோ ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய நூலக மண்டபத்தில் அண்மையில்(22-06-2014) செஸ்டோ ஸ்ரீலங்காவின் தலைவர் நாபி எம் முஸ்னி தலைமையில் நடைபெற்றது. இதில்   விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எப்.எம்.அகமதுல்அன்சார் மௌலானா வரவேற்புரை நிகழ்த்தினார்.
     
    இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி  எம்.எஸ்.சௌதுல் நஜீம், அவர்களைப்பற்றி கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி விஷேட உரையாற்றினார். செஸ்டோ ஸ்ரீலங்காவின் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப்,  அவர்களும்.செயலாளர் ஏ.ஜே.எல்.வஸீல்.ஏ.ஆர்.தஹ்லான் ஆகியோருடன் பதில் நீதிபதியும். சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.பதுறுத்தீன், சம்மாந்துறை கல்விவலய அதிபர் சங்கத்தலைவரும் அதிபருமான எம்.எச்.எம்.பாறூக்,ஏ.எம்.றியாஸ் ஆகியோர் போன்னாடை போர்த்தி கௌரவித்தனர.
     
    சமூக செவையாளர் எஸ்.எம்.ஜாபீர் நினைவுச் சின்னம் வழங்கி  கௌரவித்தார.;;; பிறை எப்.எம். வானெலி  கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல்  கையூம்; மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம.;அமீர், முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சட்டத்தரணி  எம்.எஸ்.எம்.ஜெமீல்;, பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா, அசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம.;ஐ.எம்.வலீத். சிரேஷ்ட முகாமைத்தவ உதவியாளர் எஸ்.எம்.றபாயுதீன்.விரவுரையாளர்களான ஏ.ஏ.நுபைல், எம்.எம்.பாஸீல்  மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உள்ளீட்ட ஊரின் முக்கியஸ்தர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி  எம்.எஸ்.சௌதுல் நஜீம், அவர்களை வாழ்த்தி கௌரவித்தனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்விப் பணிப்பாளர் சௌதுல் நஜீமுக்கு பாராட்டும், கௌரவிப்பும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top