நமது நிருபர்;
கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் மு.காவில் இருந்து விலகி தேசிய காங்கிரஸில் இணைய இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாகவே அவர் மு.காவிலிருந்து விலக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.
கல்முனை மாநகர சபையின் மேயராக இருந்த சிராஸ் மீராசாஹிவு தமது மேயர் பதவியை இராஜினாமா செய்ததனையடுத்து, பிரதி மேயராக இருந்த நிஸாம் காரியப்பர், மேயராக நியமனம் செய்யப்பட்டார்.
சிராஸ் மீராசாஹிவுக்கு அடுத்ததாக, வாக்குகளின் அடிப்படையில் ஏ.ஆர்.அமீர் இருக்கின்றார். வாக்குகளின் அடிப்படையில் அமீருக்கு பிரதி மேயர் பதவி வழங்கப்படாததன் காரணமாகவே அவர் தேசிய காங்கிரஸில் இணைய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

0 comments:
Post a Comment