• Latest News

    June 29, 2014

    அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு !

    இன்று எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அநியாயக்காரர்களின் கொடூரங்களுக்கு எதிராக இருகை ஏந்தி பிரார்த்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
    புனித றமழான் காலத்தில் இறைவனை மிக நெருங்கி எமது சமூகத்திற்காக  பிரார்த்திக்க முனைவோமாக ! அத்தோடு எமது சமூகத்திற்கு எதிராக சிங்கள பேரினவாதம் மேற்கொண்ட திட்டமிட்ட காடைத்தனத்தின் விளைவாக அளுத்கம, பேருவளை, தர்ஹா நகர், அதிகாரகொட, வெலிப்பன்ன மற்றும் இதர முஸ்லிம் பிரதேச மக்களின் பொருளாதாரம், உயிர் உடமைகள் அழிக்கப்பட்டுள்ளன.
    தற்போது றமழான் காலத்தில் நாம் நோன்பு நோற்று, நிம்மதியாக குடும்பங்களுடன் உண்டு நாளாந்தம் வழமைபோன்று சந்தோசமாக இம்முறை றமழானை கழிக்க அல்லாஹ் எமக்கு அருள் புரிந்துள்ளான். அல்-ஹம்துலில்லாஹ். ஆனால் எமது இரத்தங்களில் ஒரு சாரார் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் அடுத்த வேளை உணவிற்கு கஷ்டப்படும் நிலைமையில், எரிந்து நாசமாக்கிய வீடுகளின் ஓரங்களில் படுத்துறங்கி எதிர்காலம் சிதைந்தும் காணப்படுகின்றார்கள்.

    எனவே, இந்நிலையில் எமது சகோதரர்களுக்காக நாம் இரு கை ஏந்தி பிரார்த்திப்பதோடு, எமது தனவந்தர்கள் வழங்கும் ஸகாத், ஸதகாவில் விசேடமாக இம்முறை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும். அதன் மூலம் இம்முறை றமழானை பாதிக்கப்பட்டவர்களும் அடைய வாய்ப்பு ஏற்படும். அல்-ஹம்துலில்லாஹ்.
    பாதிக்கப்பட்ட ஒரு அதிகாரகொட தாயின் உளக்குமுறல் அங்கு சென்றிருந்த வேளை எமக்கு மிகவும் வேதனையளித்தது.

    பணம் படைத்தவர்கள் பலர் இந்த அளுத்கம கொடூரத்திற்கு பிறகு ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவேஇ வள்ளல்கள் வாரி வழங்கி இவர்களின் கண்ணீரை துடைக்க ஆயத்தமாகுவோமாக !
    அதுபோல் இஸ்லாமிய வரலாற்று ரீதியில் நாம்  கண்ட வரலாற்று சான்றை வைத்து இறைவனிடம் இந்த ஞானசார, உட்பட அனைத்து இஸ்லாமிய விரோத சக்திகளையும் இஸ்லாத்தின் காவலர்களாக மாற்றித்தருமாறு இறைவனிடம் பிரார்த்திக்க தவற வேண்டாம். இஸ்லாத்திற்கு எதிராக இருந்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாத்தில் காவலர்களாக மாறிய வரலாற்றை எம்மால் மறக்க முடியாதல்லவா ? எனவே இறைவனிடம் இக்கிளர்ச்சியாளர்களை இஸ்லாமிய காவலர்களாக மாற்றித்தருமாறு இறைவனிடம் துஆ செய்ய இப்புனித றமழதனை சிறந்த தருணமாக பயன்படுத்த நாம் அனைவரும் முனைவோமாக ! எமது நல்ல எண்ணங்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக...
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top