'பிரேஸிலில் நான்கு பள்ளிவாயல்கள் அமைக்காமல் அந்நாட்டை விட்டு வெளியேறுவதில்லை' என இம்முறை கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றிய ஜேர்மன் அணியின் முஸ்லிம் வீரர் 'மஸ்ஊத் ஓதேல்' தெரிவித்துள்ளார். மேலும், தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் 5 இலட்சம் யூரோவை காஸா சிறுவர்களுக்கு அனுப்புவதாகவும் அவர் வாக்களித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக நடைபெற்று, முடிவடைந்த உலகக்கிண்ணக் கால்ப்பந்தாட்டப் போட்டியில் இஸ்லாமிய உணர்வை வெளிப்படுத்தும் பல செயல்களை உதைப்பந்தாட்டக் களத்தில் செய்ததன் மூலம், முஸ்லிம்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். பீபா நிறுவன உறுப்பினர் ஒருவர் இஸ்ரேலுக்கு சார்பானவராகக் காணப்பட்டதால் அவருடன் கைலாகு செய்ய மறுத்தமை, ஜேர்மன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதும் இறைவனுக்கு சிரம்பணிந்தமை போன்ற விடயங்களால் முஸ்லிம்கள் மனங்களில் இடம்பிடித்தார். மஸ்ஊத துருக்கியை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும், அவரது பெற்றோர்களும் முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
0 comments:
Post a Comment