உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு ஐரோப்பாவின் இரண்டு முன்னணி அணிகளான ஜெர்மனியும், பிரான்ஸும் தகுதி பெற்றுள்ளன.
பிரான்ஸ், நைஜீரியாவை 2-0 எனும் கணக்கிலும், ஜெர்மனி அல்ஜீரியாவை 2-1 எனும் கணக்கிலும் வென்றன.
பிரென்சு அதிபர் ஃப்ரான்ஸுவா ஒலாந்(த்)தின் மகிழ்ச்சி
பிரான்ஸ் சார்ஃபில் ஃபோக்பா 79 ஆவது நிமிடத்திலும், யோபோ 90 ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
ஜெர்மனியின் வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்கள்
ஆனால் ஜெர்மனி-அல்ஜீரியா ஆட்டம் 90 நிமிடங்களை
கடந்த பிறகு உபரி நேரத்துக்கு சென்று மிகவும் விறுவிறுப்பாகவும்
பரபரப்புடனும் நடைபெற்றது.
அதில் ஜெர்மனி 2-1 எனும் கணக்கில் வென்றது.
ஜெர்மனிக்காக ஸ்கரிலும், ஒசிலும் கோல் அடிக்க, ஆட்டத்தின் கடைசி
நிமிடத்தில் அல்ஜீரியாவின் ஜாபோ ஒரு கோல் அடித்தும் அந்த அணியால் வெற்றி
பெற முடியவில்லை.
ஏமாற்றம் மற்றும் அதிர்ச்சியில் அல்ஜீரிய ரசிகர்கள்
இதையடுத்து நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் ஆப்ரிக்க அணிகளின் பங்கேற்பு முடிவுக்கு வந்துள்ளது. BBC
0 comments:
Post a Comment