எப்போது இவ்வீதியின் புனரமைப்பு வேலைகள் முடிவடையும்?
எம்.சஹாப்தீன்-
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை (மத்திய) வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (16.07.2014) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால், இன்னும் இதன் வேலைகள் முடிவடையாது பாதியிலேயே இருந்து கொண்டிருக்கின்றன.
எம்.சஹாப்தீன்-
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை (மத்திய) வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (16.07.2014) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால், இன்னும் இதன் வேலைகள் முடிவடையாது பாதியிலேயே இருந்து கொண்டிருக்கின்றன.
கடற்கரையில் அமைந்துள்ள வைத்தியசலையின் அம்புலனடஸ் வண்டியின் போக்குவரத்திற்கும், பொது சுகாதார காரியாலயத்தினதும், ஆயுர்வேத வைத்தியசாலையினதும், ஹாஷிபுல் உலூம் அரபுக் கல்லூhயினதும் போக்குவரத்திற்கு அவசியமான இவ்வீதியை பொது மக்களும் அதிக அளவில் கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
நிந்தவூர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமைப்பட்டு அபிவிருத்தி வேலைகளை செய்யாது, தனித்தனியே செயற்படுவதனாலும், ஆளுக்கு ஆள் கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு வருவதனாலும், நிந்தவூரில் வைத்தியசாலை வீதி போன்ற பல முக்கிய அபிவிருத்திகள் செய்யப்படாதிருக்கின்றன.
நிந்தவூர் மக்கள் பிரதிநிதிகளை ஒற்றுமைப்படுத்துவதற்கு ஒரு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள். அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. காரணம், எம்.பிமாரும், தவிசாளரும் ஒற்றுமைப்பட்டால் தங்களின் பிழைப்பு கெட்டுப் போய்விடுமென்று குறுகிய சிந்தனையில் இயங்கிக் கொண்டிருக்கும், சிறு குழுவினர் அநாமோதய துண்டுப் பிரசுரங்களை அடிக்கடி இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே, நிந்தவூர் வைத்தியசாலையின் புனரமைப்பு வேலைகளை பூர்த்தி செய்வதற்கு நிந்தவூரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச சபையும் ஒற்றுமையுடன் முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டும். வைத்தியசாலையின் வீதியை புனரமைப்பு வேலைகளுக்கான நிதியை பெற்றுக் கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி கடற்கரை வீதியால் சென்று, காரைதீவினை ஊடறுத்து, வெட்டு வாய்க்கால் வழியாக அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியை அடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலைக்கான புனரமைப்பு வேலைகள் கடந்த 16.07.2011 அன்று கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வீதியை புனரமைப்பு செய்வதற்காக, விஸதரிக்க வேண்டிய விடயத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டதனால், அபிவிருத்தி பணிகள் காலதாமதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வீதியின் புனரமைப்பு வேலைகளில் அமைச்சர் உதுமாலெவ்வை கவனம் செலுத்த வேண்டும். வேலையை ஆரம்பித்து வைத்தால் முடித்து வைக்கவும் வேண்டும் அல்லவா?
0 comments:
Post a Comment