அஸ்லம் அலி:
சிங்கள ராவய கொழும்பிலிருந்து தெவனகல பகுதிக்கு வாகனப் பேரணியாக சென்றுள்ளது. பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொலிசார் நிறுத்தப்பட்டுள்ளனர் .அதேவேளை நாட்டின் முதலாவது தற்கொலைப் படை தெவனகலைக்கு என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கள ராவய அமைப்பின் இலட்சினை பொறிக்கப்பட்ட போஸ்டர்களின், 'கொடுத்த வாக்குறுதியை அப்படியே நிறைவேற்றும் வகையில் சிங்கள தேசத்தின் முதலாவது தற்கொலைப் படை தெவனகலைக்கு ' என்னும் வாசகங்கள் காணப்படுகின்றன.பேரணியின் தோல்வி
பெரும் எடுப்பில் பெளத்த தீவிரவாத அமைப்பான சிங்கள ராவய அமைப்பினால் பெரும் எதிர்பார்ப்புடனும் பல நாள் பிரசாரத்தின் பின்னர் முன்னெடுக்கப் பட்ட வாகன பேரணி தோல்வியில் முடிவடைந்துள்ளது என்று தெவனகல பிரதேச முஸ்லிகள் தெரிவிகின்றனர் .
இது உள்ளூர் கடும்போக்கு வாதிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுதுள்ளதாகவும் அவர்கள் தெரிவிகின்றனர் . சிங்கள ராவய கொழும்பில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு ஆயிரக் கணக்கில் ஆக்களை கொண்டு வர திட்டமிட்மிட்டிருந்த போதும் நூற்று கணக்கில் கூட ஆதரவாளர்கள் கிடைக்கவில்லை என்று அறிய முடிகிறது . இறுதியில் தனது உறுப்பினர்களுடன் சில வாகனத்தில் ஏறிவந்துள்ளனர் .
மாவனலைஇ தெவனகல பிரதேசத்தை ஒரு உலுக்கு உலுக்கும் நோக்குடன் திட்டமிடப் பட்ட பேரணி, பேரணி என்ற வகையில் தோல்வியில் முடித்துள்ளது என தெவனகல பிரதேச முஸ்லிகள் தெரிவிகின்றனர் . எனினும் வேறுவழிகளில் தமது இலக்கை அடைய கடும்போக்கு சக்திகள் முயற்சிக்கலாம் என்றும் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
குறித்த சர்ச்சை தொடர்பில் பிரதேச முஸ்லிம்களுக்கும், பெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் சினேக பூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத சக்திகள் தெவனகல பகுதியில் பல நூறு ஆண்டுகளாக வாழந்து வரும் நூற்றுகனாக முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு ஆர்பட்டங்க்களை நடாத்தி வருகின்றன.
0 comments:
Post a Comment