• Latest News

    July 18, 2014

    தென்கிழக்கு கலை இலக்கிய வாதிகளின் ஒன்று கூடலும் கௌரவிப்பும், இப்தார் நிகழ்வும்

    எம்.வை.அமீர்: லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் அமைப்பும் இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய முற்போக்கு மன்றமும் இணைந்து இன்று (2014-07-18) சாய்ந்தமருது மல்ஹருல் சம்ஸ் மகா வித்தியாலயத்தில், அல்ஹாஜ் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்களது தலைமையில், தென்கிழக்கு கலை இலக்கிய வாதிகளின் ஒன்று கூடலும் கௌரவிப்பும்,  இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.
    லக்ஸ்டோ தலைவர் மருதூர் ஏ.எல்.அன்சார் துP அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக யூ.எல். ஆதம்­பாவா, தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக மொழித்­துறை தலைவர் றமீஸ் அப்­துல்லா, உலக இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய மாநா­டு­களின் ஒருங்­கி­ணைப்­பாளர் வைத்­திய கலா­நிதி எம். தாசிம் போன்றோர் பங்குகொண்டு கருத்துரைகளை வழங்கிய அதேவேளை தென்கிழக்கு பிராந்தியத்தில் இருந்து பெரும்திரளான கலை இலக்கிய வாதிகளும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

    தென்­கி­ழக்கு பிராந்­தி­யத்தில் இலக்­கியத் துறையின் வளர்ச்சி பற்­றியும் இப் பிராந்­தி­யத்தில் இலக்­கி­யத்­து­றைக்­காக சேவை­யாற்றும் மூத்த படைப்­பா­ளிகள் கௌர­விப்பு சம்­பந்­த­மா­கவும் இளம் எழுத்­தா­ளர்­களின் விபரங்கள் தொகுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

    இந்நிகழ்வின் போது இலக்­கி­ய­வா­தி யூ.எல்.ஆதம்பாவா மற்றும் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், லக்ஸ்டோ தலைவர் மருதூர் ஏ.எல்.அன்சார் துP, உலக இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய மாநா­டு­களின் ஒருங்­கி­ணைப்­பாளர் வைத்­திய கலா­நிதி எம். தாசிம், தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக மொழித்­துறை தலைவர் றமீஸ் அப்­துல்லா போன்றோர் பொன்னாடைகளும் நினைவுப் பரிசுகளும் வாளங்கி கௌர­விக்கப்பட்டனர்.

    நிகழ்வின் இறுதியாக இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.

    0
    0


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென்கிழக்கு கலை இலக்கிய வாதிகளின் ஒன்று கூடலும் கௌரவிப்பும், இப்தார் நிகழ்வும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top