சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்தின் மாபெரும் இன ஐக்கியத்திற்கான இப்தார் நிகழ்வு இன்று (17) வியாழக்கிழமை மாலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எஸ். நபார் தலைமையில் இடம்பெற்றது.
மேர்ஸி லங்கா நிறுவனத்தின் புரண அனுசரணையில் இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களும் மற்றும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் எம்.ஐ.எம். பிர்தௌஸ், உறுப்பினர் எம். நஸார்தீன், சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி றஹ்மான், வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள், மேர்ஸி லங்காவின் உயர் அதிகாரிகள், தொழிலதிபர் எம்.எச்.நாஸர் ஆகியோர் உட்பட ஆசிரியர்கள், பெற்றார்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இவ்விப்தார் நிகழ்வில் விசேட மார்க்கச் சொற்பொழிவும் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment