• Latest News

    July 18, 2014

    வளப்பற்றாக்குறையாக இருந்தாலும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை நிறைவான சேவைகளை செய்கின்றது: சிகிச்சை நிபூணர் ஏ.டபிள்யூ.ஏ.சமீம்

    அபூஇன்ஷப்: வளப் பற்றாக்குறை வைத்தியத்துறைக்கு சவாலாக இருந்து விடக்கூடாது உள்ள வளங்களைக் கொண்டு எமது பிரதேச மக்களுக்கான நிறைந்த வைத்திய சேவையினை பணிகளை ஆற்ற வேண்டியுள்ளது  அதற்கு உதாரணமாக திகழ்ந்த வைத்தியசாலைதான் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையாகும் என சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் விஷேட சத்திர சிகிச்சை நிபூணர் ஏ.டபிள்யூ.ஏ.சமீம் தெரிவித்தார்.

    சிங்கபூர் தேசிய பல்கலைக் கழக வைத்தியசாலைக்கு இரண்டு வருடகால விஷேட வைத்திய உயர் கல்வியின் நிமித்தம் எதிர் வரும் 18ம் திகதி பயணமாகவுள்ள சத்திர சிகிச்சை நிபூணர் ஏ.டபிள்யூ. ஏ.சமீம் அவர்களின் அற்பணிப்புடனான சேவையை பாராட்டி சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் கலைக்கப்பட்ட வைத்திய சாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களால் நேற்று (16) சம்மாந்துறை அல்தாஸா ரெஸ்ருரண்டில்  ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

    ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.எம்.சஹிட் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சமீம் தொடர்ந்து உரையாற்றுகையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலை அம்பாறை மாவட்டத்தில் பழம் பெரும் வைத்தியசாலை அத்துடன் கூடுதலான சனத்தொகையினை கொண்ட பிரதேசமாகும் இந்த வைத்திய சாலை ஆதார வைத்திய சாலையாக தரமுயர்த்தப்பட்டதிலிருந்து சுhமர் இரண்டரை வருடகாலம் சத்திர சிகிச்சை நிபூணராக பணியாற்றக் கிடைத்தது அதை நான் மிகவும் சந்தோசமாக ஏற்றுக் கொண்டு பணியாற்றினேன் காரணம் கடந்த சுணாமி அனர்த்தத்தின் போது இந்தப் பிரதேச மக்கள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்காக செய்த அற்பணிப்புடனான சேவை என்னைக் கவர்ந்தது அதனால் என்னுடைய குடும்பத்தாருடைய முழு ஆசிவாதத்துடன் இந்த வைத்திய சாலையில் பல தியாகங்களுடன் கடையாற்றினேன்.

    இந்த வைத்திய சாலை ஆதார வைத்திய சாலையாக தரமுயர்த்தப்பட்ட போதும் ஆளணிப்பிரச்சினைகள் அதாவது வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு தாதியர்களுக்கான தட்டுப்பாடு ஏணைய சிற்றுழியர்களின் தட்டுப்பாடு போன்றவற்றுக்கு அப்பால் சத்திர சிகிச்சைக் கூடத்துக்கு தேவையான தளபாடங்கள் கருவிகள் இல்லாதிருந்தது இந்த வைத்திய சாலையின் அத்தியட்சகராக இருந்த டாக்டர் இஸ்ஸதீன் அவர்கள் எனக்கு பக்கபலமாக அவருடைய நிர்வாக கடமைகளுக்கு மேலதிகமாக என்னுடன் கூட இருந்து இங்குள்ள வளங்களைக் கோண்டு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகளுக்கு பக்கபலமாக இருந்து வந்தார்.

    அதே போன்று அக்ரைப்பற்று ஆதார வைத்தியசாலை அம்பாறை பொதுவைத்திய சாலைகளிலிருந்து வருகை தந்த மயக்க மருந்து நிபூணர்களின் சேவைகளையும் இந்த இடத்தில் நான் நினைவு கூறவேண்டும் தற்போது இங்குள்ள மயக்கமருந்த நிபூணர் றிஸ்வான் மற்றும் சத்திர சிகிச்சை கூடத்திலுள்ள தாதியர்கள், சிற்றூளியர்களும் நினைவு கூறப்பட வேண்டும் காரணம் ஆளணிப்பற்றாக்குறைக்கு மத்தியில் அற்பணிப்புடன் 4000க்கு மேற்பட்ட சிறிய மற்றும் பாரிய சத்திர சிகிச்சைகளை அதாவது சகல வளங்களுமுள்ள வைத்திய சாலைகளில் மேற்கொள்ளமுடியாதிருந்த சத்திர சிகிச்சைகளையும் செய்வதற்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.

    நான் விஷேட வைத்திய உயர் கல்வியின் நிமித்தம் சிங்கபூருக்கு சென்றாலும் இந்த வைத்திய சாலையின் ஒரு நலன் விரும்பியாக இருந்த என்னுடைய உதவிகளை செய்யவுள்ளேன் மீண்டும் இந்த வைத்திய சாலையில் கடமையாற்ற இறைவன் நாடவேண்டும் அவ்வாறு நாடினால் நான் எந்த சலனமும் இல்லாது இங்கு பணியாற்ற சித்தமாகவுள்ளோன் எனக்கு தற்போது கிடைத்துள்ள சந்தர்பம் எனது அறிவையும் மேலதிக விஷேட திறமைகளையும் வளர்த்துக் கொள்ள உதவும் அது எமது பிராந்திய மக்களுக்கு பயனாக அமையும் எனவும் தெரிவித்தார்.

    மேலும் இந்த வைத்திய சாலையின் அபிவிருத்திக்காக அற்பணிப்புக்களை செய்த உங்கள் அனைவரையும் நான் நன்றியுணர்வுடன் பாராட்டுகின்றேன் எனவும் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன் உட்பட பலர் கலந்த கொண்டனர் இவ்வைபவத்தின் போது வைத்திய நிபூணர் சமீமுக்கு பொன்னாடைபோர்த்தப்பட்டு நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வளப்பற்றாக்குறையாக இருந்தாலும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை நிறைவான சேவைகளை செய்கின்றது: சிகிச்சை நிபூணர் ஏ.டபிள்யூ.ஏ.சமீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top