சுலைமான் றாபி: நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் வருடந்தோறும் சிறப்பான
முறையில் நடாத்தும் இப்தார் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும்
இராப்போசன நிகழ்வும் இம்முறையும் நிந்தவூர் அல் அதான் பாடசாலையில் இன்று
(17.07.2014) இடம்பெற்றது. மதீனா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆசிரியர்
ஏ.எம். அன்சார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நிந்தவூர் பிரதேச சபை
உதவித் தவிசாளர் எம்.எம்.எம் அன்சார், அம்பாறை மாவட்ட கபடி
பயிற்றுவிப்பாளர் ஏ.எல் அனஸ் அஹமட், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின்
செயலாளர் ஏ.எம்.எம். றசீன், நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக
சேவைகள் ஒழுங்கமைப்பின் தலைவர் ஐ.எல். இப்றாஹிம், பாடசாலைகளின் அதிபர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் தலைவர், செயலாளர்கள்
அனைவரும் கலந்து கொண்டனர்.
July 18, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment