யுத்தக்குற்றம் தொடர்பாகக் கைதுசெய் யப்பட
வேண்டுமென்றால் அது இஸ்ரேலியப் பிரதமர் தான் கைதுசெய்யப் பட்டு
தண்டிக்கப்பட வேண்டியவர் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் (24)
பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இஸ்ரேலின் கண்மூடித் தனமான தாக்குதல்
காரணமாக சிறுவர் சிறுமியர் உட்பட பலர் கொல்லப்படுகிறார்கள். முஸ்லிம்கள்
மிகப் புனிதமாகக் கருதும் அல்அக்ஷ்மா மீதும் தாக்குதல் தொடுக்கப் படுகிறது.
இதனை வன்மையாகக் கண்டி க்கிறேன்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும்
இது பற்றி பேசப்படுகிறது. எனினும் ஏகாதிபத்திய அமெரிக்காவின் அனுசரணையில்
இன்று இஸ்ரேல் அடவாடித் தனத்தை செய்து வருகிறது. இஸ்ரேலையும்
பாலஸ்தீனத்தையும் எமது நாடு அங்கீகரித்துள்ளது. எமது ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீன் இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவரா கவும்
நீண்டகாலம் இருந்து வந்துள்ளார்.
யுத்தக்குற்றவாளியாக உலகில்
தண்டிக்கப்படவேண்டியவர் என்றால் அது இஸ்ரேலியப் பிரதமராகத்தான் இருக்க
வேண்டும் என்றார். கால விதிப்பு (திருத்த) சட்டம் தொடர் பான
விவாதத்திற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.-தினகரன்

0 comments:
Post a Comment