• Latest News

    July 25, 2014

    தேங்கி நிற்கும் இஸ்ரேல் (யூத) இராணுவம் நெருங்கி வரும் பலஸ்தீன் போராளிகள்.....!!

    வான் தாக்குதல்களையும், கடற்தாக்குதல்களையும் நடாத்திய இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் கடந்த வியாழன் அன்று தங்கள் தரை ஆக்கிரமிப்பை ஆரம்பித்தார்கள். காஸாவின் இஸ்ரேல் பக்கத்தில் அமைந்துள்ள எல்லைகளை கடக்க முற்பட்ட போது அவர்களை அதிர வைத்தவை சுரங்க பாதைகளின் வாயில்கள். படைகளிற்கு முன்னதாக வேவுத்தகவல்களை வழங்கும் இஸ்ரேலிய அணியே இவற்றை முதலில் கண்டது. எல்லை கண்காணிப்பு கோபுரங்களையும், கண்காணிப்பு கமாராக்களையும் ஏமாற்றிய நிலையில் பலஸ்தீன போராளிகள் சுரங்க வாயில்களை இஸ்ரேலிய எல்லைகளினுள் அமைத்திருந்தனர்.

    இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களின் படி 13 சுரங்க வாயில்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவை ரபாஃவின் சிவிலியன் பாவனைக்கான சுரங்க வாயில்கள் போலல்லாது இராணுவ பாவனைக்கு உசிதாமான விதத்தில் அமைவுற்றிருந்தன. இதன் பின்னரே போராளிகள் இஸ்ரேலிற்குள் நுழையும் மார்க்கம் பற்றிய அவர்களது ஊகங்கள் ஊர்ஜிதமானது.
    காஸாவின் கடற்கரையோரத்தினை பலஸ்தீன போராளிகள் கடுமையான கண்காணிப்பிற்குள் உள்ளாக்கியுள்ளனர். பல தாக்குதல் குழுக்கள் இதற்கண்மையில் கவர் எடுத்து காத்துள்ளன. கடல் மார்க்கமாக சடுதியாக உள்நுழையந்து தனது சிறப்பு ப் படை கொமாண்டோக்களை கொண்டு தாக்கும் இஸ்ரேலின் தந்திரோபாயம் பயனற்ற நிலையில் எல்லை வாயில்கள் ஊடாக நுழைய வேண்டிய நிலை இஸ்ரேலிய படைகளிற்கு ஏற்பட்டுள்ளது.

    'ஸ்டீல் வோல்' என பலஸ்தீனப் போராளிகளையும் குறிப்பாக தற்கொலை தாக்குதல் நடாத்துபவர்களையும் உள்நுழைய விடாமல் கட்டிய உருக்கு மதில் சுவர்கள் இப்போது இஸ்ரேலிய படைகளிற்கும் எதிரியாக போய் விட்டது. நினைத்த சாதகமான இலக்கில் தங்கள் டாங்கிகளை நகர்த்த முடியாமல் தடுத்து நிற்கின்றன இந்த ஸ்டீல் வோல்கள். காஸாவினுள் உள்நுழைய வேண்டும் என்றால் இப்போது அவர்களும் 'எவகேசன் பொயின்ட்ஸ்' எனும் நுழை அல்லது வெளியேறும் வாயில்கள் ஊடாகவே நகர வேண்டியுள்ளதால் அந்த வாயில்களை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் தயாராக காத்திருக்கின்றனர்.

    சுமார் 01 கிலோ மீட்டர் தூரத்தில் இருதரப்பும் நெருங்கி நிற்பதனால் விமான தாக்குதல்களை கூட துல்லியமான ஏவுகணைத்தாக்குதல்கள் என்ற வட்டத்தில் மட்டும் மட்டுப்படுத்தும் நிலை இஸ்ரேலிய படைகளிற்கு ஏற்பட்டுள்ளது. விமான குண்டுத்தாக்குதல்களை நினைத்தவாறு வீச முடியாது. அது பல வேளைகளில் தங்கள் தரப்பிற்கே சேதங்களை ஏற்படுத்தி விடும்.

    தற்காப்பு சண்டைகளை ஹமாஸ் நிகழ்த்துகைiயில் அதனை எப்படி எதிர் கொள்வது என்று தயார்படுத்தப்பட்ட இஸ்ரேலிய படைகள் இப்போது புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளன. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் போராளிகள் தற்காப்பு சமர்களை செய்யும் பாதுகாப்பு வியூகங்களை அமைத்துள்ள போதிலும் அவர்கள் பல முனைகளிலும் திடீரென உட்புகுந்து தாக்குதல்களை நடாத்துகின்றனர்.

    சுமார் 15 - 20 பேர் கொண்ட தாக்குதல் அணிகள் என்பதனால் அவர்கள் மேல் பெரும் குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்த முடியாத அதே வேளை பலஸ்தீன போராளிகள் பாம்பு போல வளைந்து கிடக்கும் டாங்கி மற்றும் கவச வாகன அணிகளை இலக்கு வைத்து ரொக்கெட் லோஞ்சர்கள் மூலமும், அன்டி டேங் லோஞ்சர்கள் மூலமும் 05 நிமிட தாக்குதல்களை நிகழ்த்து விட்டு தளம் திரும்பி விடுகின்றனர். எதிரியின் நகர்வை, தாக்குதல் நடாத்தும் இடத்தை இனங்கண்டு பதில் தாக்குதல் நடாத்துவதற்கு முன்பே இவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றனர். காரணம் சிறு குழுவாகவே அவர்கள் தங்களது அசைவுகளை மேற்கொள்வதாகும்.

    ஆட்டிலறிகளினால் தாக்குதல் நிகழ்த்த முடியாத அளவு களத்தில் நெருங்கி நிற்கிறார்கள் இரு தரப்பும். மோட்டார்களை கொண்டு மட்டும் எதிர்தரப்பு நோக்கி குண்டுகளை ஏவலாம். இஸ்ரேலிற்கு முடியுமான இந்த தாக்குதலை பலஸ்தீனப் போராளிகளினாலும் செய்ய முடியும

    எர்பன் வோரை ஆரம்பித்தால் நகரின் கட்டங்களினுள் சண்டைகள் ஆரம்பமாகும். வான் தாக்குதலின் துணையை இழந்த நிலையில் சண்டைகளை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு நேர்ந்தால் யூதப்படைகளின் உட்புகும் பாதைகளை பலஸ்தீன போராளிகள் துண்டாடி கட்அவுட் போட்டு விடுவார்கள். இதன் பின்பு இலகுவாக யூதப்படைகளை அழித்து விடுவார்கள். அது மட்டுமல்லாது காஸாவில் உள் நுழைந்து வெளியேறுவது என்றால் அது டாங்கிகளின் வழித்துணையுடன் மட்டுமே முடியும். டாங்கிகளை நகர்த்த முன்னர் ஏரியா கிளியரிங் செய்வதும், எனிமி அம்புஸ்ஸை நியூற்றலைஸ் பண்ணியாக வேண்டும். இப்போது இஸ்ரேலிய படைகள் இதைத்தான் செய்ய எத்தனிக்கின்றன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேங்கி நிற்கும் இஸ்ரேல் (யூத) இராணுவம் நெருங்கி வரும் பலஸ்தீன் போராளிகள்.....!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top