சுலைமான் றாபி: அக்கரைப்பற்று - கல்முனை
பிரதான வீதியில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில்
அண்மைக்காலமாக அதிக வீதி விபத்துக்கள் இடம்பெற்றுவந்தன. அந்த வகையில்
தொடர்ச்சியாக விபத்துக்களை தடுக்கும் பொருட்டு கல்முனை வீதி அபிவிருத்தி
அதிகாரசபையினால் பாதையின் இரு மருங்கிலும் வேகத்தடைகள் (Speed Breaker)
தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எச்.எம். நாளிரின் மேற்பார்வையின் கீழ்
இடப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இவ்வீதியால் பிரயாணம் செய்யும் சாரதிகள்
குறிப்பிட்ட இந்த இடத்தில் தங்களின் வாகன வேகத்தினைக் குறைத்து பயணம்
செய்து விபத்துக்களை தவிர்த்துக் கொள்ள முடியுமென கல்முனை நிறைவேற்றுப்
பொறியியலாளர் ஏ.எம்.எம். ஜாபிர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.
July 18, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment