உலகக்கிண்ண தொடரின் அரையிறுதியில் ஜேர்மனியின் அதிரடி காரணமாக இறுதிப்போட்டிக்கு செல்லும் பிரேசிலின் கனவு தகர்ந்தது.
உலக
கிண்ண தொடரின் முதல் அரையிறுதியில் நட்சத்திர வீரர் நெய்மர், அணித்தலைவர்
தியாகோ சில்வா இல்லாமல் உள்ளூர் பிரேசில் அணி, முல்லர், குளோஸ் என பலமான
ஜெர்மனியை எதிர்கொண்டது.
போட்டி துவங்கிய முதல் நொடி முதல் ஜேர்மனியின் ஆதிக்கமே
மேலோங்கியிருந்தது. 11வது நிமிடத்தில் ஜேர்மனி அணிக்கு கிடைத்த கார்னர்
வாய்ப்பில் அந்த அணியின் டோனி குரூஸ் அடித்த பந்தை நட்சத்திர வீரர் முல்லர்
மிகச் சாதரணமாக கோல் அடித்தார். தொடர்ந்து சில நிமிட இடைவேளையில்
ஜேர்மனியின் குளாஸ் (23வது நிமிடம்) இரண்டாவது கோல் அடித்தார். இந்த
அதிர்ச்சியில் இருந்து பிரேசில் வீரர்கள் மீள்வதற்குள் துடிப்பாக செயல்பட்ட
ஜேர்மனியின் டோனி குரூஸ் (24, 26) அடுத்ததடுத்து இரட்டை அடி கொடுத்தார்.
பின் சுவாரஸ்யம் இல்லாமல் துவங்கிய இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து
சொதப்பலாக ஆடிய பிரேசில் வீரர்கள் ஜேர்மனி வீரர்களிடம் இருந்து பந்தை
தட்டிப்பறிக்க கூட முடியாமல் தட்டுதடுமாறினர்.
இந்நிலையில் ஜேர்மனியன் சூரில் 69வது நிமிடத்தில் மற்றொரு கோல்
அடிக்க, வெறுத்துப்போன பிரேசில் ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற
துவங்கினர். தொடர்ந்து மிரட்டிய ஜேர்மனி அணிக்கு சூரில் (79) 7வது கோல்
அடித்தார். தொடர்ந்து போராடிய பிரேசில் அணியின் எல்லா கோல் முயற்சிகளையும்
அசராமல் முறியடித்த ஜேர்மனி கோல் கீப்பர் மானுவல் நீயூர் மேலும் தலைவலியை
ஏற்படுத்தினார்.
போட்டியின் கடைசி வினாடியில் பிரேசில் அணிக்கு ஆஸ்கர் (90) ஒரு கோல் மட்டும் அடித்தார்.
முடிவி்ல், ஜேர்மனி அணி, 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று,
உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு எட்டாவது முறையாக முன்னேறி புதிய
உலக சாதனை படைத்தது.
பிரேசில் அணி, தனது கால்பந்து வரலாற்றில் கடந்த 94 ஆண்டுகளில் இல்லாத
அளவில் பெரும் தோல்வியை சொந்த ரசிகர்கள் முன்னிலையில் சந்தித்தது. தவிர,
கிண்ணம் வெல்லும் வாய்ப்பையும் பரிதாபமாக இழந்தது. இருப்பினும் மூன்றாவது
இடத்திற்கான போட்டியில் பிரேசில் அணி இடம் பெற்றுள்ளது.



0 comments:
Post a Comment