• Latest News

    July 19, 2014

    ஏறாவூரில் கிரோய்ன் மீட்பு!

    ஏறாவூரில் மட்டக்களப்பு, மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிளைப்பின்போது ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து 4 பொதி ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதன் எடை 160 மில்லிகிராம் என மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா தெரிவித்தார்.

    இச்சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிச்சநகர் லெப்பை வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
    குறித்த போதைப்பொருள் வியாபாரி வியாபாரத்திற்குப் பயன்படுத்திய முச்சக்கரவண்டியை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.

    முச்சக்கரவண்டியினுள்ளிருந்து போலியான அடையாள அட்டைகள் ஒரு தொகை பணம் உட்பட வேறு பொருட்களும் மதுவரி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டடுள்ளன.

    சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் கைது செய்வதற்காக அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

    எதிர்வரும் திங்கட்கிழமை போதைப்பொருள், முச்சக்கரவண்டி உட்பட கைப்பற்றப்பட்ட பொருட்கள் மட்டககளப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

    இச்சுற்றி வளைப்பின்போது திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா தலைமையில் எஸ்.அலவத்தேகம, கே.ஆனந்தநாயகம், ரமேஸ்குமார், எம்.ஜெயக்குமார், வர்ணசூர்ய, எஸ்.ரஜனிகாந்த், வசந்த புஸ்பகுமார ஆகிய மதுவரி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஏறாவூரில் கிரோய்ன் மீட்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top