• Latest News

    July 09, 2014

    ஐ.நா பாதுகாப்பு சபையின் பிரதிநிதியாகிறார் மிச்செய்ல் சிசன்- பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனைக்கு அமெரிக்கா கண்டனம்

    இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செய்ல் சிசனை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அமரிக்காவின் உதவி பிரதிநிதியாக நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தீர்மானித்துள்ளார்.

    இது தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில் சிசனை பாதுகாப்பு சபைக்கு நியமிக்க ஒபாமா எண்ணங்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மிச்செய்ல் சிசன் தற்போது அமெரிக்காவின் வெளியுறவு சேவை உறுப்பினராகவும் இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமான தூதுவராகவும் 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

    இந்தநிலையில் புதிய பதவியின் நிமித்தம் அவர் இலங்கை தூதுவர் பதவியை விட்டு செல்வாரா? அல்லது அந்த பதவிக்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகளின் பொறுப்பையும் ஏற்பாரா? என்ற விடயம் வெளியாகவில்லை.

    பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனைக்கு அமெரிக்கா கண்டனம்

    இலங்கையில் அரச சார்பற்ற அமைப்புக்கள் ஊடகவியலாளர்களுடன் இணைந்த வேலைத்திட்டத்தை முன்கொண்டு செல்ல முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனை குறித்து அமெரிக்கா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

    அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜேன் சாகி இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

    இந்த நடவடிக்கையானது, இலங்கையின் ஜனநாயக பண்புகளையும் பேச்சு சுதந்திரத்தையும் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    எனவே அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு ஜனநாயக ரீதியாக செயற்பட வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.நா பாதுகாப்பு சபையின் பிரதிநிதியாகிறார் மிச்செய்ல் சிசன்- பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனைக்கு அமெரிக்கா கண்டனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top