வடக்கு ஈராக்கிய நகரம் திக்ரித்தில்,
ஈராக்கிய சிறப்பு கமாண்டோ படைப்பிரிவு மீண்டும் ஒருதடவை ISIS இயக்கத்திடம்
அடி வாங்கியுள்ளது. புதன்கிழமை (16.07.2014) நடந்த மோதலில் திக்ரித் நகரில்
இருந்து 4 கி.மீ. தொலைவுவரை பின்வாங்கியுள்ளது, ஈராக்கிய படைப்பிரிவு. ISIS இயக்கத்தினால் கைப்பற்றப்பட்ட
திக்ரித் நகரத்தை ஈராக்கிய ராணுவம் என்ன விலை கொடுத்தாவது கைப்பற்ற
வேண்டும் என்பதே, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க யுத்த ஆலோசகர்கள் போட்டுக்
கொடுத்த திட்டம்.
இந்த திட்டத்தின்படி, கடந்த ஒரு வார காலமாக திக்ரித் நகரைக் கைப்பற்றும் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது ஈராக்கிய ராணுவம். ஏற்கனவே திக்ரித் நகருக்குள்
ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவ வீரர்களை தரையிறக்கம் செய்து, நகரை கைப்பற்ற
அமெரிக்கா போட்டுக் கொடுத்த திட்டம் புஸ்வாணம் ஆகிப் போனது பற்றி ராணுவ
புலனாய்வு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
அதையடுத்து இன்று அதிகாலை திக்ரித் நகர எல்லைவரை வந்துவிட்டிருந்தது ஈராக்கிய சிறப்பு கமாண்டோ படைப்பிரிவு. ஆனால், எல்லையில் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.திக்ரித் எல்லையில் கடுமையான மோட்டார்
தாக்குதல்கள் மட்டுமின்றி, ISIS இயக்கத்தின் சினைப்பர் தாக்குதல்களும்
(தொலைவில் இருந்து குறிபார்த்து தனித்தனி நபர்களை சுட்டு வீழ்த்துதல்)
நடைபெற்றதில், இன்று மதியம் எல்லையில் இருந்து பின்வாங்கியுள்ள ஈராக்கிய
படைப்பிரிவு, தற்போது எல்லையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் தற்காலிக
கமாண்ட் சென்டர் ஒன்றை அமைத்து நிலைகொண்டுள்ளது.
இந்த கமாண்டோ படைப்பிரிவு இப்படியே
பாக்தாத் திரும்பி விடுவார்களா, அல்லது நாளை மீண்டும் திக்ரித் நகரை
கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுவார்களா என்று சரியாக தெரியவில்லை.
0 comments:
Post a Comment