அபூ அஸ்ஜத்: “மஹதி இராணுவத்தினர் ஹமாஸை விடவும் வலுவானவர்கள், ஹிஸ்புல்லாக்களை விடவும் ஆக்ரோசமானவர்கள்” ஈராக்கில் நடக்கும் உள்நாட்டு சண்டையில் இஸ்லாமிய கிலாபாவின் (ISIS)
படையினரின் (முன்பு பேராளிகள்) வேகமான முன்னேற்றங்களை கண்டு ஈராக்கிய
இராணுவம் அச்சமடைந்துள்ளது. அதன் பல களமுனைத்தளபதிகளும்,
கட்டளைத்தளபதிகளும் தங்கள் யூனிபோர்ம்களை களைந்து விட்டு சிவில் உடையில்
மக்களோடு மக்களாக கலந்து மாயமாகி வருகின்றனர். அமெரிக்காவுடனான யுத்தத்தில்
சீ.ஐ.ஏ. ஈராக்கிய தளபதிகளை பெரும் விலைக்கு வாங்கி இவ்வாறே தங்கள்
படைக்கட்டமைப்புக்களை களைத்து விட்டு சிவில் உடையில் மக்களுள் கலந்து
பாதுகாப்பாக வெளியேறுமாறு அவர்களை பணித்திருந்தது. அன்று அமெரிக்க
டொலர்களின் வாசனையைக்கண்டு சீருடைகளை களைந்த ஈராக்கிய தளபதிகள் இன்று
ISIS-ன் கறுப்பு கொடிகளின் அசைவைக்கண்டு சீருடைகளை களைகின்றனர். இதுதான்
விதியின் விளையாட்டோ?
பிரதமர் மலிக்கியின் ஷியா அரசு செய்வதறியாது உறைந்து நிற்கிறது. தனது
தளபதிகளுடன் இணைந்து களமுனைகள் பற்றிய திடடமிடல்களில் சுறுசுறுப்பாக இயங்க
வேண்டிய பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் முல்லாக்களிடம் அடைக்கலம் தேடும்
நிலை அங்கு உருவாகியுள்ளது. இராணுவமும் அதன் அதிகாரிகளும் ISIS இடம்
சரணடைவதன் ஊடாக எப்படி தங்கள் உயிர்களை பாதுகாக்கலாம் என்ற மனோ நிலைக்கு
பெரும்பாலும் சரிய ஆரம்பித்து விட்டதை இராக்கிய அரசு சரியாகவே
புரிந்துள்ளது. இனி இராணுவத்தை மட்டும் நம்பி பயனில்லை என்ற நிலைக்கு அதன்
அரசியல் தலைமை தள்ளப்பட்டுள்ளது.
ஷியாக்களின் உயர் நிலை தலைவர் அயாத்துல்லாஹ் அலி அல் சிஸ்தானியிடம்
மண்டியிட்டு ஈராக்கை காபாற்ற அவரது உதவியை நாடியுள்ளது ஈராகிய அரசு.
ஈரானியிரான 83 வயதுடைய Ayatollah Ali al-Sistani -யின் வார்த்தைக்கு
இலட்சக்கணக்கான ஷியாக்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிப்பார்கள் என்ற
நம்பிக்கையே நூரி அல்-மலிக்கியின் இந்த முடிவிற்கு காரணம்.
அயாத்துல்லாஹ்வும் அதற்கு உடன்பட்டு ஷியாக்களை “சுன்னிகளிடம் இருந்து
ஷியாக்களையும் ஈராக்கையும் காப்பாற்ற அணிதிரளுமாறு” கோரியுள்ளார்.
இவரது மந்திர வார்த்தைகளிற்கு ஈர்க்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான
ஷியாக்கள் இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தில் துணைப்படையினராக (வொலண்டியர்
போசஸ்) தங்கள் அடையாள அட்டைகளை வழங்கி பதிவு செய்து வருகின்றனர்.
இவர்களிற்கான போர் ஆயுதங்களை ஈராக்கிய இராணுவம் தாராளமாக வழங்கி வருகிறது.
ஷியாக்களிற்கு இதை தவிர வேறு வழியில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம்
ஈராக்கில் இருந்த காலத்தில் இவர்கள் மிகவும் கொடூரமாக சுன்னி முஸ்லிம்களை
கொலை செய்தும் இம்சித்தும் வந்தனர். கிலாபாவின் இராணுவம் பக்தாத்தில்
உள்நிலைந்தால் தாங்கள் விசாரிக்கப்பட்டு தாங்கள் செய்த குற்றத்திற்காக
உடனடியாகவே மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவோம் என்ற நிலையில் ஜீவமரண
போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் பக்தாத் முழுதிலுமே கிலாபாவின்
சீலீப்பர் செல்கள் பல்லாயிரம் பேர் இருக்கின்றனர். ஒரு பெரிய ஏர்பன் பைட்
எனும் நகர் யுத்தம் பக்தாத்தில் நிகழப்போகிறது. முன்பு பெய்ரூட்டில்
கிழக்கு பெய்ரூட் கிறிஸ்தவர்களும், மேற்கு பெய்ரூட் முஸ்லிம்களும்
மோதிக்கொண்டதனைப்போல.
தெற்கு ஈராக்கின் பஸராவிலும் அல்-சத்ர் சிட்டியிலும் கூட ஷியாக்களின்
மிலீசியாக்கள் தயார் நிலைக்கு ஆயத்தம் செய்து வருகின்றன. “மஹதி இராணுவம்”
எனும் ஷியாக்ககளின் ஆக்ரோசம் மிக்க மூர்க்கம் நிறைந்த இராணவப் போராளிக் அணி
இங்கேயே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் பஸராவின் வோர் லோர்ட் “முக்ததா
அல்-சத்ர்” இங்கேயே உள்ளார். கூபா, சத்ர் சிட்டி, நஜாஃப் போன்ற பல உறுதியான
தளங்கள் இவர்கள் வசம் உள்ளன. சுமார் 60,000 போராளிகளும், 40,000
ஆயுதப்பயிற்ச்சி பெற்ற ஆதரவாளர்களும் இதனை பாதுகாக்க
தயாராக்கப்பட்டுள்ளனர்.
நிச்சயமாக பஸராவில் கிலாபாவின் இராணுவம் நுழைய முற்பட்டால் அவர்களை
பாதுகாக்க ஈரானிய இராணுவம் உள் நுழையும் அல்லது ஹிஸ்புல்லாஹ் பூதத்தை
ஏவிவிடும்.
0 comments:
Post a Comment