பி.எம்.எம்.ஏ.காதர்: நீண்ட காலமாக வடிகான் இன்றி வெள்ளத்தில் மூழ்கிய பெரிய நீலாவணை வீசி வீதியின் 6ம் குறுக்கு வீதிக்கான வடி கான் அமைக்கும் பணியின் 2ம் கட்ட வேலைகள் தற்பொது நடைபெற்று வருகின்றன இதை கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் நேற்று (11-08-2014) பார்வையிட்டார்.
மழை காலங்களில் இவ்வீதியால் பயணிக்க முடியாத நிலை இருந்தது. இவ்வீதியின் அவல நிலைபற்றி இப்பிரதேச மக்கள் கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அவர் எடுத்த துரித முயற்சியின் பயனாக பிரதி அமைச்சர் அட்மிரல் சரத்வீர சேகர அவர்கள் ஒதுக்கிய ஒன்பது இலட்சம் ரூபா நிதியில் இந்த வடிகான் அமைக்கும் பணிகளின் 2ம் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இப்பிரதேச மக்கள் கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அவர் எடுத்த துரித முயற்சியின் பயனாக கவனிப்பாரற்றுக் கிடந்த சுமார் 220 மீட்டர் நீளமான இந்த வீதியின் வடிகான் அமைப்புப் பணிகள் தற்போது பூர்த்தியாகும் தறுவாயில் உள்ளது.
இந்த வீதிக்கான வடிகான் அமைப்புப் பணிக்கு கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நிதி ஒதுக்கிய பிரதி அமைச்சர் சரத் வீரசேகர அவர்களுக்கும,; தீவிரமாக நின்று இந்த வேலைத்திட்டத்தைப் பூர்த்தி செய்ய உதவிய இஸட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களுக்கும் இப்பிரதேச மக்கள் நன்றியைத் தெரிவித்தள்ளனர்.


0 comments:
Post a Comment