அகமட் எஸ். முகைடீன்: சமூக நலன்புரி அபிவிருத்தி அமைப்பு (சுவேடோ) – ஸ்ரீலங்கா, மருதமுனை ஏற்பாடில் வருடாந்த பரிசளிப்பு விழா – 2014 மருதமுனை கலாசார மண்டபத்தில் நேற்று (10.08.2014) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான பி.எச். பியசேன, கௌரவ அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், விஷேட அதிதியாகளாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ. கபார், கல்முனை வலையக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். சக்காப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கை வானொலி, தொலைக்காட்சிப் புகழ் பாடகர்களான மருதமுனை எஸ்.எம்.கமால் மற்றும் நிந்தவூர் முஸ்தபா ஆகியோரின் பாடல்களும் சிறுவர் நிகழ்சிகளும் பார்வையாளர்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments:
Post a Comment